மாவட்ட செய்திகள்

புதுச்சேரியில் வரும் 31ஆம் தேதி வரை வெளிமாநில வாகனங்களுக்கு தடை + "||" + Otherstates vehicles entry banned in Puducherry till 31st

புதுச்சேரியில் வரும் 31ஆம் தேதி வரை வெளிமாநில வாகனங்களுக்கு தடை

புதுச்சேரியில் வரும் 31ஆம் தேதி வரை வெளிமாநில வாகனங்களுக்கு தடை
புதுச்சேரியில் வரும் 31-ஆம் தேதி வரை வெளிமாநில வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி,

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தற்போது அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வருவதால் அதற்கு தகுந்தாற்போல் மத்திய மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.  அதன்படி, புதுவையில்    நாளை (திங்கட்கிழமை) முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

இந்த உத்தரவு வருகிற 31-ந்தேதி வரை அமலில் இருக்கும் என்றும் இந்த காலகட்டத்தில் பொதுமக்கள் பொருட்கள் வாங்கிட கடைகள் திறந்திருக்கும். குறிப்பாக உணவு பொருட்கள் கடை, மருந்து கடைகள், பால் கடைகள் எந்த நேரமும் திறந்திருக்கும் என்று முதல்வர் நாராயண சாமி நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். 

இந்த நிலையில், புதுச்சேரியில் வரும் 31 ஆம் தேதி வரை, தமிழகம் உள்பட வெளிமாநில வாகனங்கள் வரத் தடை விதிக்கப்படுவதாக  முதல் அமைச்சர் நாரயாணசாமி அறிவித்துள்ளார்.  இந்த உத்தரவின்படி பொது இடங்களில் 4 பேருக்கு மேல் கூடக்கூடாது. கடைகளிலும் அதிக அளவில் கூட்டம் சேரவேண்டாம் என்று முதல் அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஊரடங்கு நீட்டிப்பால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கும்; நாராயணசாமி எச்சரிக்கை
ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
2. மின்சார வினியோகத்தை தனியார்மயமாக்குவதை ஏற்க முடியாது; முதல்-அமைச்சர் திட்டவட்டம்
புதுச்சேரியில் மின்சார வினியோகத்தை தனியார்மயமாக்குவதை ஏற்க முடியாது என முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
3. மதுக்கடைகள் விரைவில் திறக்கப்படும் ; முதல்-அமைச்சர் நாராயணசாமி தகவல்
புதுச்சேரி மாநிலத்தில் மதுக்கடைகள் விரைவில் திறக்கப்படும் என முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
4. பல முறை நிதி கேட்டும் மத்திய அரசு செவி சாய்க்கவில்லை; முதல்-அமைச்சர் நாராயணசாமி வருத்தம்
புதுச்சேரிக்கு நிதி வழங்க பலமுறை கோரிக்கை விடுத்தும் மத்திய அரசு செவிசாய்க்கவில்லை என முதல்- அமைச்சர் நாராயணசாமி வருத்தம் தெரிவித்தார்.
5. வளைகுடா நாடுகளில் புதுச்சேரியை சேர்ந்தவர்கள் தவிப்பு காணொலி காட்சி மூலம் நாராயணசாமி பேச்சு
வளைகுடா நாடுகளில் புதுச்சேரியை சேர்ந்தவர்கள் தவிப்பு காணொலி காட்சி மூலம் நாராயணசாமி பேச்சு.