மாநில செய்திகள்

பிரதமரின் வேண்டுகோளை ஏற்று எடப்பாடி பழனிசாமி கைதட்டி டாக்டர்களுக்கு பாராட்டு + "||" + Accept the PM's request Edappadi palanicami applause praise for the doctors

பிரதமரின் வேண்டுகோளை ஏற்று எடப்பாடி பழனிசாமி கைதட்டி டாக்டர்களுக்கு பாராட்டு

பிரதமரின் வேண்டுகோளை ஏற்று எடப்பாடி பழனிசாமி கைதட்டி டாக்டர்களுக்கு பாராட்டு
பிரதமர் மோடியின் வேண்டுகோளின்படி எடப்பாடி பழனிசாமி கைதட்டி டாக்டர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். மேலும் ரஜினிகாந்த் மணிஓசை எழுப்பினார்.
சென்னை, 

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படும் டாக்டர்கள் உள்ளிட்ட அனைத்து துறை பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கைதட்டி பாராட்ட வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடி வேண்டுகோள் விடுத்தார்.

இதனை ஏற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குடும்பத்துடன் தனது இல்லத்தின் முன்பு நின்று கைதட்டி நன்றி தெரிவித்தார். அப்போது, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் பொ.சங்கர் ஆகியோர் உடனிருந்தனர்.

இதே போன்று, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தனது வீட்டின் வாசலில் நின்று சில நிமிடங்கள் கைதட்டி நன்றி தெரிவித்தார்.

இதேபோல் நடிகர் ரஜினிகாந்த் சென்னை போயஸ்கார்டனில் உள்ள தனது இல்லத்தில் உள்ள விநாயகர் சிலைக்கு மேல் இருந்த மணியை, நேற்று மாலை 5 நிமிடம் அடித்து பாராட்டுக்களை வெளிப்படுத்தினார்.

பின்னர் அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘நேற்று பதிவு செய்த காணொளியில் 12-14 மணிநேரம் மக்கள் வெளியில் நடமாடாமல் இருந்தாலே கொரோனா வைரஸ் பரவுவது தடைபட்டு, சூழல் மூன்றாம் நிலைக்கு செல்வது தவிர்க்கப்படலாம் என்று நான் கூறியிருந்ததால், அது, ‘இன்று (நேற்று) மட்டும் அப்படி இருந்தாலே போதும்’, என்று பரவலாக புரிந்து கொள்ளப்பட்டு, அதிகம் பகிரப்பட்டது.

இதனால் டுவிட்டர் நிர்வாகம் அதை நீக்கியுள்ளது. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர அரசு பரிந்துரைக்கும் காலம் வரை இன்று (நேற்று) போலவே சுய தனிமைப்படுத்துதலை நாம் கவனமாக பின்பற்றி இந்த கொடிய வைரசை வீழ்த்துவதற்கான முயற்சியில் கவனத்தை செலுத்துவோம். இவ்வேளையில் என்னுடைய காணொளியின் நோக்கத்தை புரிந்து கொண்டு, ஆதரித்து, மக்களிடம் பதிவை சரியான முறையில் கொண்டு சேர்த்த அனைவருக்கும் நன்றி.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

இதேபோல பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், திண்டிவனம் தைலாபுரத்தில் உள்ள தனது இல்லத்தில் கரவொலி மூலம் டாக்டர்களுக்கு நன்றி தெரிவித்தார்.