மாநில செய்திகள்

கொரோனா பாதிப்பு: அரசின் அறிவுரையை மீறினால் கடும் நடவடிக்கை - விஜயபாஸ்கர் எச்சரிக்கை + "||" + Though tracked,some of the travellers violate Govt’s strict order to selfquarantine Dr C Vijayabaskar

கொரோனா பாதிப்பு: அரசின் அறிவுரையை மீறினால் கடும் நடவடிக்கை - விஜயபாஸ்கர் எச்சரிக்கை

கொரோனா பாதிப்பு: அரசின் அறிவுரையை மீறினால் கடும் நடவடிக்கை - விஜயபாஸ்கர் எச்சரிக்கை
கொரோனா பாதிப்பால் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பயணிகள் அரசின் அறிவுரையை மீறி வெளியே நடமாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை,

சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வருகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா போன்ற வல்லரசு நாடுகளையும் கொரோனா விட்டுவைக்கவில்லை.  இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 396ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- 

வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பயணிகள் அரசின் அறிவுரையை மீறி வெளியே நடமாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.  தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்ட சிலர் வீட்டில் இருக்காமல் வெளியே சென்று வருகின்றனர்.

அறிவுறுத்தப்பட்ட பயணிகள் வெளியே நடமாடுவது அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. அரசின் அறிவுரையை மீறிய நபர்களின் விவரம் மாவட்ட நிர்வாகம், போலீசிடம் தரப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.