தேசிய செய்திகள்

டெல்லி 31-ந் தேதி வரை முடக்கம்; முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் அறிவிப்பு + "||" + Delhi Lockdown Begins Arvind Kejriwals Message To Residents

டெல்லி 31-ந் தேதி வரை முடக்கம்; முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லி 31-ந் தேதி வரை முடக்கம்; முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் அறிவிப்பு
வரும் 31 ஆம் தேதி நள்ளிரவு வரை வரை, டெல்லியில், கொரோனா தடுப்பு நடவடிக்கை கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக முதலமைச்சர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் கடும் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சில மாநிலங்கள் அத்தியாசவசிய தேவைகளுக்கான சேவைகளை தவிர மற்ற அனைத்து சேவைகளை முடக்கியுள்ளன. இந்நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டோரின் 80 மாவட்டங்களை முற்றிலும் முடக்க மத்திய அரசு அறிவுறுத்தியது. 

கொரோனா வைரஸின் பரவலை தடுக்க   ரயில்வே, மெட்ரோ மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டு உள்ளன.1000 க்கும் மேற்பட்ட ரயில்களை ரத்து செய்த ரயில்வே, மார்ச் 31 வரை பயணிகள் ரயில் சேவையை நிறுத்துவதாக அறிவித்து உள்ளது.

பஞ்சாப், ராஜஸ்தான், அருணாச்சல பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டு உள்ளது. குஜராத்தில் அகமதாபாத், சூரத், ராஜ்கோட் மற்றும் வதோதரா ஆகிய நான்கு நகரங்களை புதன்கிழமை வரை ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்ப்ட்டு உள்ளது. காய்கறிகள், பால் பொருட்கள் மற்றும் மருத்துவ பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களை விற்கும் கடைகள் மட்டுமே திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது

மேற்கு வங்காளத்தில் 6 மாவட்டங்களில் முழுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இன்று முதல் வரும் 31 ஆம் தேதி நள்ளிரவு வரை, டெல்லியில், கொரோனா தடுப்பு நடவடிக்கை கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக முதலமைச்சர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்களும் இந்த கால கட்டத்தில் மூடப்பட்டிருக்கும் என தெரிவித்துள்ள அவர், ஆனால் ஊழியர்கள் பணிக்கு வந்ததாக கருதப்பட்டு, நிறுவனங்கள் அவர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார். டெல்லியின் எல்லைகள் மூடப்பட்டு தனிமைப்படுத்தப்படும் என அவர் கூறினார்.

பால், மளிகைக் கடைகளை, மருந்தகங்கள், மருத்துவமனைகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு தடை இல்லை. டெல்லி மெட்ரோ ரெயில்கள் ஓடாது என்பதுடன், பொது இடங்களில் மக்கள் கூட்டமாக கூடுவதை தடுக்கும் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. நாங்கள் எந்த பணியும் செய்யவில்லை என்று நீங்கள் நினைத்தால், எங்களுக்கு வாக்களிக்க வேண்டாம் -அரவிந்த் கெஜ்ரிவால்
கல்வி, மின்சாரம், நீர், மேம்பாட்டுப் பணிகளில் நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தால் மட்டும் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களியுங்கள் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறி உள்ளார்.
2. புதுடெல்லி: சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த பாலியல் வன்கொடுமைக்குள்ளான இளம்பெண் உயிரிழப்பு
புதுடெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த உ.பி.யில் பாலியல் வன்கொடுமைக்குள்ளான இளம்பெண் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது