மாநில செய்திகள்

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு போர்க்கால நடவடிக்கை எடுத்து வருகிறது; முதல்வர் பழனிசாமி + "||" + people must comply with state orders.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு போர்க்கால நடவடிக்கை எடுத்து வருகிறது; முதல்வர் பழனிசாமி

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு போர்க்கால நடவடிக்கை எடுத்து வருகிறது; முதல்வர் பழனிசாமி
கொரோனா தொற்று அறிகுறியை அரசுக்கு தெரியப்படுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை என்று முதல் அமைச்சர் பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை,

கொரோனா தொற்று அறிகுறியுடன் இருப்பதை தெரியப்படுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல் அமைச்சர் பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். முதல் அமைச்சர் பழனிசாமி பேரவையில் இது தொடர்பாக கூறியதாவது:- “ தமிழகத்தில் பால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்க தடை இல்லை. போதுமான அளவு மருந்துகள் கையிருப்பில் உள்ளன. . 

அரசின் உத்தரவுகளை மக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். கொரோனா வைரஸ் அறிகுறியுடன்  இருப்பதை அரசுக்கு தெரியப்படுத்தாவிடில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா குறித்த வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக கூடுதலாக ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு போர்க்கால நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசு மருத்துவமனைகளில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன.  மருத்துவமனைகளில் 92,406 படுக்கை வசதிகள் உள்ளன, தேவைப்பட்டால் அதிகரிக்கப்படும்.  முகக்கவசங்கள் உள்ளிட்ட பொருட்களை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை” என்று தெரிவித்தார்.