உலக செய்திகள்

கொரோனா பாதிப்பு காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இருந்து கனடா விலகல் + "||" + Canada says it won't participate if Tokyo Olympics go ahead as planned

கொரோனா பாதிப்பு காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இருந்து கனடா விலகல்

கொரோனா பாதிப்பு காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இருந்து கனடா விலகல்
கொரோனா பாதிப்பு காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இருந்து கனடா விலகுவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
கனடா,

32-வது ஒலிம்பிக் விளையாட்டு போட்டி ஜூலை 24-ந்தேதி முதல் ஆகஸ்டு 9-ந்தேதி வரை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறுகிறது. இந்த பிரபஞ்சத்தையே ஆட்டிபடைக்கும் கொரோனா வைரசின் அசுரவேக தாக்குதல் தீவிரமடைந்து வருவதால், ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி நடக்குமா அல்லது தள்ளிப்போகுமா? என்ற கேள்வி நீண்டு கொண்டே போகிறது. இன்னும் 4 மாதங்கள் இருப்பதால் அதற்குள் நிலைமை சரியாகி போட்டியை நடத்துவதற்குரிய சாதகமான சூழல் உருவாகி விடும் என்று ஜப்பான் அரசாங்கம் நம்புகிறது.

இந்தநிலையில், ஒலிம்பிக் போட்டிகளை ஒரு ஆண்டுக்கு ஒத்திவைக்கவில்லை என்றால் தங்கள் நாட்டு வீரர்களை ஒலிம்பிக் போட்டிகளுக்கு அனுப்பப் போவதில்லை என கனடா அரசு தெரிவித்துள்ளது. உடல் ஆரோக்கியத்தை விட வேறு எதுவும் முக்கியமில்லை எனவும் கனடா தெரிவித்துள்ளது.

இது தனிப்பட்ட வீரரின் உடல் நிலை சார்ந்த விஷயம் மட்டுமல்ல, வீரர்களின் குடும்பத்தினர் மற்றும் கனட மக்களின் ஆரோக்கியம் சார்ந்த விஷயம் எனவும் குறிப்பிட்டுள்ளது. மேலும் 

ஒலிம்பிக் போட்டிகளை ஒத்திவைக்கவில்லை என்றால் தங்கள் நாட்டு வீரர்களை ஒலிம்பிக் போட்டிகளுக்கு அனுப்பப் போவதில்லை என கனடா அரசு அதிரடியாக தெரிவித்துள்ளது.

2016 ஆம் ஆண்டு நடந்த ரியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் 22 பதக்கங்களை கனடா வென்றுள்ளது.  நீச்சல் வீரர் பென்னி ஒலெக்ஸியாக் மற்றும் ஸ்ப்ரிண்டர் ஆண்ட்ரே டி கிராஸ் ஆகியோர் இதில் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.