மாநில செய்திகள்

சட்டப்பேரவை நாளையுடன் ஒத்திவைப்பு: சபாநாயகர் தனபால் அறிவிப்பு + "||" + TN Assembly session ends tomorrow

சட்டப்பேரவை நாளையுடன் ஒத்திவைப்பு: சபாநாயகர் தனபால் அறிவிப்பு

சட்டப்பேரவை நாளையுடன் ஒத்திவைப்பு: சபாநாயகர் தனபால் அறிவிப்பு
சட்டப்பேரவை நாளையுடன் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.
சென்னை, 

சட்டப்பேரவை மானியக்கோரிக்கைக்கான கூட்டத்தொடர் கடந்த 9-ம் தேதி தொடங்கியது. ஏப்ரல் 9-ம் தேதிவரை நடக்கும் என அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸ்  பாதிப்பு அதிகரித்து  வரும் சூழலில் சட்டப்பேரவையை ஒத்திவைக்க  திமுக தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.  ஆனால், அரசு அதை கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து மீண்டும் மீண்டும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன. 

இதற்கு மத்தியில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து,  ஏப்ரல் 9-ல் நிறைவு பெறும் என்பதை மார்ச் 31 வரை என மாற்றி அமைக்கப்பட்டது. இந்த நிலையில்,  தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளையுடன் நிறைவு பெறுவதாக சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார். முன்னதாக, சட்டப்பேரவை கூட்டத்தொடரை புறக்கணிக்கப்போவதாக திமுக அறிவித்திருந்தது.