உலக செய்திகள்

சவுதி அரேபியாவில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு + "||" + King Salman imposes curfew across Saudi Arabia to contain COVID-19

சவுதி அரேபியாவில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு

சவுதி அரேபியாவில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு
சவுதி அரேபியாவில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவிட்டு சவுதி அரேபியாவின் மன்னர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
ரியாத்

சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துல்அஸிஸ், திங்கள் மாலை முதல் 21 நாட்கள் நாட்டில்  இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தார்.

சவுதிஅரேபியாவில் கொரோனாவிற்கு 511 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்  எடுக்கப்பட்டு வருகின்றன.

அதன் அடுத்த கட்டமாக சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துல்அஸிஸ், திங்கள் மாலை முதல் 21 நாட்கள் நாட்டில் இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தார்.ஊரடங்கு உத்தரவின் கீழ்  குடிமக்களும் குடியிருப்பாளர்களும் இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை தங்கள் வீடுகளுக்கு வெளியே செல்ல வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.

ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த உள்துறை அமைச்சகம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும், மேலும் இது தொடர்பாக அனைத்து உள்ளுர் மற்றும் ராணுவ அதிகாரிகளும் அமைச்சகத்துடன் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்று சவுதி பத்திரிகை நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஊரடங்கு உத்தரவின் போது குடிமக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும், தடை இல்லாத நேரத்தில் தீவிர தேவை ஏற்பட்டால் தவிர, வெளியே செல்ல வேண்டாம் என்றும் அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.

ஏனெனில் பொது சுகாதாரத்தை பாதுகாப்பது மிக முக்கியமான கடமைகளில் ஒன்றாக மாறியுள்ளது, மேலும் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கான அபாயத்திற்கு தங்களையும் தங்கள் நாட்டையும் ஆளாக்கக்கூடாது என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. காசோலையை அயன் செய்து கிருமி நீக்கம் செய்த வங்கி கேசியர்
காசோலையை அயன் செய்து கிருமி நீக்கம் செய்தார் வங்கி கேசியர் ஒருவர்
2. தமிழகத்தில் நோய் அறிகுறி இல்லாமலேயே சிலருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிப்பு; கவனம் தேவை முதல்வர் பழனிசாமி
தமிழகத்தில் நோய் அறிகுறி இல்லாமலேயே சிலருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.
3. பியர்ல் ஹார்பர்-இரட்டை கோபுரம் தாக்குதலை விட வேதனையை இந்த வாரம் சந்திக்க வேண்டும் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை
பியர்ல் ஹார்பர் தாக்குதல்,இரட்டை கோபுரம் தாக்குதலை விட வேதனை தரும் சூழ்நிலையை கொரோனாவால் இந்த வாரம் அமெரிக்கா சந்திக்க நேரிடும் என மருத்துவ நிபுணர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
4. ஐரோப்பா- அமெரிக்காவை ஆட்டிபடைக்கும் கொரோனாவின் வேகம் இந்தியாவில் பலிக்காதது ஏன்?
அமெரிக்கா, சீனா, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளை ஒப்பிடும் போது, இந்தியாவில் கொரோனாவின் வேகம் மிகவும் குறைவு என்றே சொல்லலாம் அதற்குரிய காரணங்களை டாக்டர் நாரேந்திர குமார் வர்மா விளக்குகிறார்.
5. கொரோனாவுக்கு நன்கொடை: ஒற்றுமை சிலை ரூ.30 ஆயிரம் கோடிக்கு விற்பனை விளம்பரம் கொடுத்தவர் கைது
கொரோனா தாக்குதலுக்கு நன்கொடை கொடுப்பதற்காக உலகின் மிக உயரமான சிலையான வல்லபாய் பட்டேலின் சிலையை விற்பதாக விளம்பரம் செய்தவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.