தேசிய செய்திகள்

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் முடித்துக்கொள்ளப்படுகிறது? + "||" + Parliament will start proceedings only at 2 p.m. today

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் முடித்துக்கொள்ளப்படுகிறது?

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் முடித்துக்கொள்ளப்படுகிறது?
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில், பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் முடித்துக்கொள்ளப்படும் எனத்தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதுடெல்லி,

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வதுகட்ட அமர்வு மார்ச் 2 ஆம் தேதி துவங்கியது.  ஏப்ரல் மாதம் 3-ந்தேதி வரை  பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவத் தொடங்கி இருக்கும் சூழலில், எம்.பி.கள் தங்கள் தொகுதிக்கு செல்ல முடியாமல் கூட்டத்தில் பங்கேற்றிருப்பது பெரிய விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இரு அவைகளிலும் நிதிமசோதாக்களை இன்று நிறைவேற்றிய பின் முடித்துக்கொள்ளப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஏப்ரல் 3-ம் தேதி வரை கூட்டத்தொடரை நடத்த திட்டமிட்ட நிலையில் 12 நாட்களுக்கு முன்பாகவே முடிக்கப்பட உள்ளது. வழக்கத்திற்கு மாறாக பாராளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று பிற்பகல் 2 மணிக்கு துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

1. உலகம் முழுவதும் கொரோனா பலி 24 ஆயிரத்தை தாண்டியது
உலகம் முழுவதும் கொரோனா பலி 24 ஆயிரத்தை தாண்டியது.
2. உணவுப் பொருட்களை ஏழைகளுக்கு இலவசமாக கொடுக்க வேண்டும்-மாயாவதி வற்புறுத்தல்
உணவுப் பொருட்களை ஏழைகளுக்கு இலவசமாக கொடுக்க வேண்டும் என்று மாயாவதி தெரிவித்துள்ளார்.
3. எதிர்க்கட்சிகள் அமளியால் மாநிலங்களவை 3-வது நாளாக முடங்கியது
எதிர்க்கட்சிகள் தொடர் அமளியால் மாநிலங்களவை 3-வது நாளாக முடங்கியுள்ளது.