உலக செய்திகள்

கொரோனா: உலகம் முழுவதும் பலி எண்ணிக்கை 15 ஆயிரத்தை நெருங்கியது + "||" + Coronavirus-related deaths worldwide are approaching 15,000,

கொரோனா: உலகம் முழுவதும் பலி எண்ணிக்கை 15 ஆயிரத்தை நெருங்கியது

கொரோனா: உலகம் முழுவதும் பலி எண்ணிக்கை 15 ஆயிரத்தை நெருங்கியது
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.
பெய்ஜிங்,

சீனாவில் உருவாகி உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. 192 நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

உலகம் முழுவதும்  கொரோனா வைரசுக்கு நேற்று ஒரே நாளில் 1,634 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 14,687ஆக உயர்ந்துள்ளது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. 

உலகம் முழுவதும் 3 லட்சத்து 38 ஆயிரத்து 724 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தினமும் பலியானவர்களின் எண்ணிக்கை 13 சதவீதம் அதிகரித்து வருகிறது.

தற்போது இத்தாலியில்  கொரோனா கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் சீனாவை விட இத்தாலியில் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அங்கு நேற்று ஒரே நாளில் 651 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் பலி எண்ணிக்கை 5 ஆயிரத்து 576ஆக உயர்ந்தது. மேலும் புதிதாக 5 ஆயிரத்து 560 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். 

இதையடுத்து  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 59 ஆயிரத்து 138ஆக அதிகரித்துள்ளது.

இத்தாலியில் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆனாலும் தினமும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

சீனாவில் வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது. அங்கு நேற்று 9 பேர் மட்டுமே உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்து 270 ஆக உயர்ந்தது. மேலும் புதிதாக 39 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 81 ஆயிரத்து 93 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவுக்கு மேலும் 33 பேர் பலியானார்கள். இதனால் பலி எண்ணிக்கை 452ஆக உயர்ந்தது. மேலும் புதிதாக 1,171 பேர் பாதிக்கப்பட்டனர். மொத்தம் 34 ஆயிரத்து 717 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

ஸ்பெயினில் பலி எண்ணிக்கை 1,772ஆக உயர்ந்தது. அங்கு நேற்று 391 பேர் உயிரிழந்தனர். புதிதாக 3,272 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  மொத்தம் 28 ஆயிரத்து 768 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஈரானில் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,685ஆக உயர்ந்துள்ளது. நேற்று 129 பேர் பலியானார்கள். மொத்தம் 21
ஆயிரத்து 638 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

பிரான்சில் நேற்று 112 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 674 ஆக உயர்ந்தது. 16 ஆயிரத்து 18 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 

இங்கிலாந்தில் மேலும் 48 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 281 ஆக உயர்ந்துள்ளது. அங்கு இதுவரை 5 ஆயிரத்து 688 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 

தென்கொரியாவில் 111 பேரும், நெதர்லாந்தில் 179 பேரும், ஜெர்மனியில் 94 பேரும், பெல்ஜியத்தில் 75 பேரும், சுவீடனில் 21 பேரும், கனடாவில் 20 பேரும், துருக்கியில் 30 பேரும், ஜப்பானில் 41 பேரும், இந்தோனேசியாவில் 48 பேரும் உள்பட பல்வேறு நாடுகளில் பலி எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளது. உலகம் முழுவதும் மொத்தம் 10 ஆயிரத்து 553 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா தடுப்பு பணிகள்; ரோகித் சர்மா ரூ.80 லட்சம் நிதியுதவி
கொரோனா தடுப்பு பணிகளுக்காக இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா ரூ.80 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.
2. கொரோனாவினால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண நிதி வழங்கிய கோலி-அனுஷ்கா தம்பதி
கொரோனாவினால் பாதிக்கப்பட்டோருக்கு கோலி-அனுஷ்கா தம்பதி நிவாரண நிதி வழங்கியுள்ளனர்.
3. கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க 20 ஆயிரம் ரெயில் பெட்டிகள் தனிமை வார்டுகளாக மாற்றம் - ரெயில்வே நடவடிக்கை
கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக 20 ஆயிரம் ரெயில் பெட்டிகளை தனிமை வார்டுகளாக மாற்ற ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
4. கொரோனாவில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வயதானவர்கள் என்ன செய்யலாம்; எதை செய்யக்கூடாது - மத்திய சுகாதார அமைச்சகம் ஆலோசனை
கொரோனா வைரஸ் பரவுவதில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வயதானவர்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்று மத்திய சுகாதார அமைச்சகம் சில ஆலோசனைகளை வழங்கி உள்ளது.
5. கொரோனா பரவும் ஆபத்து: தொழிலாளர்கள் வெளியேறுவதை தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன? - அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
கொரோனா வேகமாக பரவும் ஆபத்து இருப்பதால், வெளிமாநில தொழிலாளர்கள் வெளியேறுவதை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை பற்றி அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.