உலக செய்திகள்

வெறுமனே மாநிலங்களை,நகரங்களை முடக்குவது ஆபத்து- உலக சுகாதார நிபுணர் எச்சரிக்கை + "||" + WHO official warns more steps needed in addition to lockdowns

வெறுமனே மாநிலங்களை,நகரங்களை முடக்குவது ஆபத்து- உலக சுகாதார நிபுணர் எச்சரிக்கை

வெறுமனே மாநிலங்களை,நகரங்களை முடக்குவது ஆபத்து- உலக சுகாதார நிபுணர் எச்சரிக்கை
வெறுமனே மாநிலங்களை,நகரங்களை முடக்குவது ஆபத்து என உலக சுகாதார நிபுணர் ஒருவர் தெரிவித்து உள்ளார்.
லண்டன்

உலக சுகாதார அமைப்பின் உயர் அவசர நிபுணர் மைக் ரியான் கூறியதாவது:-

கொரோனா நோய்வாய்ப்பட்டவர்களைக் கண்டுபிடிப்பது, வைரஸ் உள்ளவர்கள், அவர்களை தனிமைப்படுத்துதல், அவர்களின் 

தொடர்புகளைக் கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்துதல் தான் நாம் உண்மையில் கவனம் செலுத்த வேண்டியது.

நகரங்கள், மாநிலங்கள், மாகாணங்கள் முடக்கப்படுவது தான் இப்போது ஆபத்து, வலுவான பொது சுகாதார நடவடிக்கைகள் 

முன்னெடுக்கப்படவில்லை என்றால், கட்டுப்பாடுகள் மற்றும் முடக்கப்பட்டது நீக்கப்படும் போது, நோய் மீண்டும் தீவிரமாக பரவும்.

நாம் வைரஸ் பரவுவதை கட்டுக்குள் கொண்டு வந்தவுடன் வைரஸை குறித்த ஆய்வை தொடர வேண்டும், வைரஸை எதிர்த்துப் 

போராட வேண்டும்.

பல தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன, ஆனால் ஒன்று மட்டுமே அமெரிக்காவில் சோதனைகளைத் தொடங்கியது. மக்கள் 

யதார்த்தமாக இருக்க வேண்டும். 

இது முற்றிலும் பாதுகாப்பானது என்பதை உறுதி செய்ய வேண்டும். குறைந்தது ஒரு வருடமாவது ஆகும், தடுப்பூசிகள் வரும். 

ஆனால் நாம் பாதுகாப்பாக இருக்க இப்போது செய்ய வேண்டியதைச் செய்ய வேண்டும் என கூறினார்

சீனா மற்றும் பிற ஆசிய நாடுகளைப் பின்பற்றி ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் பெரும்பகுதி புதிய கொரோனா வைரஸை 

எதிர்த்துப் போராடுவதற்கு கடுமையான கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ளன.

பெரும்பாலான தொழிலாளர்கள் வீட்டிலிருந்து பணியாற்றும் படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது மற்றும் பள்ளிகள், பார்கள், விடுதிகள் மற்றும் உணவகங்கள் மூடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லி நிஜாமுதீன் கூட்டம் : 9 ஆயிரம் பேரும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைபடுத்தப்பட்டனர்
டெல்லி நிஜாமுதீன் கூட்டத்தில் கலந்து கொண்ட 9 ஆயிரம் பேரையும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப் படுத்தப்பட்டு உள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது
2. கொரோனா வைரஸ் பாதிப்பு: சீனாவில் நாய்கள் மற்றும் பூனைகளை சாப்பிட தடை
கொரோனா வைரஸ் பாதிப்பை தொடர்ந்து சீன நகரமான ஷென்சென்னில் நாய்கள் மற்றும் பூனைகளை சாப்பிட தடை விதித்துள்ளது.
3. ஊரடங்கிற்கு பிந்தைய திட்டம் என்ன? விஞ்ஞானிகள்-மருத்துவர்கள் அடங்கிய 800 பேர் மத்திய அரசிற்கு கேள்வி
ஊரடங்கிற்கு பிந்தைய திட்டம் என்ன என விஞ்ஞானிகள்-மருத்துவர்கள் அடங்கிய 800 பேர் மத்திய அரசிற்கு கேள்வி விடுத்து உள்ளனர்.
4. கொரோனா பாதிப்புக்கு காச நோய் பி.சி.ஜி தடுப்பூசி ஒரு கேம் ஜேஞ்சராக இருக்கும்- இந்திய விஞ்ஞானிகள் நம்பிக்கை
கொரோனா பாதிப்புக்கு காச நோய் பி.சி.ஜி தடுப்பூசி ஒரு கேம் ஜேஞ்சராக இருக்கும் என அமெரிக்க விஞ்ஞானிகள் கூறி உள்ளனர். இந்திய விஞ்ஞானிகளுக்கும் நம்பிக்கை உள்ளது ஆனால் எச்சரிக்கையுடன் உள்ளனர்.
5. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இம்ரான்கான் அரசு தோல்வி - பாகிஸ்தான் ஊடகங்கள்
கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இம்ரான்கான் அரசு தோல்வி அடைந்ததாக பாகிஸ்தான் ஊடகங்கள் கூறி உள்ளன.