மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு + "||" + 144 ban across Tamil Nadu

தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு

தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு
கொரோனாவை தடுக்க தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்க அனைத்து காவல் ஆணையர்களுக்கும், கலெக்டர்களுக்கும் முதல்-அமைச்சர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை,

சீனாவில் உருவாகி உலகம் முழுவதும் பரவி பெறும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. 192 நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. உலகம் முழுவதும் 3 லட்சத்து 38 ஆயிரத்து 724 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தினமும் பலியானவர்களின் எண்ணிக்கை 13 சதவீதம் அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.  இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 415 ஆக உயர்ந்துள்ளது.  தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.

இந்தநிலையில்  கொரோனாவை தடுக்க தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்க  அனைத்து காவல் ஆணையர்களும், ஆட்சியர்களும் முதல்-அமைச்சர் பழனிசாமி  உத்தரவு பிறப்பித்துள்ளார்.

முதல்-அமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

* கொரோனா எதிரொலி: தமிழகத்தில் மக்கள் கூட்டம் கூடுவதை தடுக்கும் வகையில் நாளை மாலை 6 மணி முதல் மார்ச் 31-ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

* தமிழகத்தில் கொரோனா தொற்றால் இதுவரை 9 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அரசு தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

* 144 தடை உத்தரவை அனைத்து காவல் ஆணையர்களும், ஆட்சியர்களும் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.

* மருந்து, காய்கறி, மளிகைக்கடைகள் செயல்பட எந்த தடையும் இல்லை.

* கொரோனா பற்றிய அறிவுறுத்தலை மீறி மக்கள் வெளியே நடமாடுவதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

* மாவட்ட எல்லைகள், மூடப்பட்டாலும், காய்கறி, பால், உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லட் தடையில்லை.

* அத்தியாவசிய ப்பணிகளை மேற்கொள்வோர் தங்களது பணிகளை தொடரலாம்.

* அம்மா உணவகங்கள் வழக்கம் போல் இயங்கும். மருந்தகங்கள், உணவகங்கள் செயல்பட அனுமதி.

* பேருந்துகள், டாக்சி, ஆட்டோக்கள், இயங்காது.

* மருந்து அத்தியாவசிய பொருள் தயாரிப்பு ஆலை இயங்கலாம்.

* ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட நிகழ்ச்சிகளை தொடர காவல்துறை அனுமதி தேவை.

* அத்தியாவசியத்துறைகள் மற்றும் அலுவலகப்பணிகள் தவிர மற்ற அரசு அலுவலகங்கள் செயல்படாது.

* தமிழகத்தில் நாளை மாலை 6 மணி முதல் மார்ச் 31-ம் தேதி வரை அனைத்து மாவட்ட எல்லைகளை மூட உத்தரவிடப்படுகிறது.

* மாவட்ட எல்லைகள் மூடப்பட்டாலும், காய்கறி, பால், உள்ளிட்ட அத்தியாவசியபொருட்களை கொண்டு செல்ல தடையில்லை.

* சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களை முடக்க மத்திய அரசு அறிவுறுத்திய நிலையில் அனைத்து மாவட்டமும் முடக்கப்படுகிறது.

* குற்றவியல் நடைமுறைச்சட்டத்தின் பிரிவு 144ன் கீழ் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.

* அத்தியாவசிய கட்டிடம் பணிகள் தவிர பிற கட்டிடம் பணிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.

* மருத்துவம் உள்ளிட்ட பணிகளையும் மேற்கொள்ளும் தனியார் நிறுவனங்கள், மருத்துவமனைகள் இயங்கும்.

* தனியார் நிறுவனங்கள், ஐ.டி.ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணிபுரிய வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் இன்று (மார்ச் 23) இரவு 9 மணி முதல் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி அறிவித்துள்ளார். மேலும், தடை காலத்தில், உணவகங்களில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி என்றும், ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களுக்கு தடையும் விதித்து உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரியில் 144 தடை உத்தரவு ஊரடங்காக மாறிய நிலையில் தற்போது தமிழகத்தில் 144 தடை அமலாகிறது.