தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு + "||" + A 57-year-old male patient, who was admitted to the Salt Lake unit expired at around 3:35 pm

இந்தியாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு
இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது.
கொல்கத்தா,

சீனாவில் உருவாகி உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. 192 நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. 

உலக அளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15,297 ஆக அதிகரித்துள்ளது. உலகளவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 3,49,090 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவல் 415 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இந்நிலையில்  மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா மருத்துவமனையில் கொரோனா வைரசுக்கு சிகிச்சை பெற்று வந்த 57 வயது நபர் கொரோனாவால் உயிரிழந்தார்.

இது குறித்து மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறுகையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் இன்று மாரடைப்பால் உயிரிழந்தார். சில தினங்களுக்கு முன் அவரும் அவரது குடும்பத்தினரும் இத்தாலியில் இருந்து திரும்பி வந்தனர்.

என அவர் கூறினார். 

தெலுங்கானாவில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.