தேசிய செய்திகள்

உள்நாட்டு விமான சேவைகள் நாளை நள்ளிரவு முதல் ரத்து + "||" + Operations of domestic scheduled commercial airlines shall cease with effect from midnight on March 24

உள்நாட்டு விமான சேவைகள் நாளை நள்ளிரவு முதல் ரத்து

உள்நாட்டு விமான சேவைகள் நாளை நள்ளிரவு முதல் ரத்து
வர்த்தக ரீதியில் இயக்கப்படும் உள்நாட்டு விமான சேவைகள் நாளை நள்ளிரவு முதல் ரத்து செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி,

சீனாவில் உருவாகி உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. 192 நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. 

உலகம் முழுவதும் 15,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8 ஆக உள்ளது.

இந்நிலையில் கொரோனாவைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 19 மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டு விமானச் சேவைகள் மற்றும் பெரும்பான்மை ரெயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், உள்நாட்டு விமானச் சேவையையும்  நாளை (24-ம் தேதி) நள்ளிரவு முதல் நிறுத்துவதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சரக்கு விமானங்களுக்கு இந்த தடை பொருந்தாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இயக்கப்படும் விமானங்கள் அனைத்தும் நாளை இரவு 12 மணிக்குள் தரையிறக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.