மாநில செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கை: தமிழக காவல்துறை அதிகாரிகளுக்கு டி.ஜி.பி. புதிய உத்தரவு + "||" + Tamil Nadu Police Officers DGP The new directive

கொரோனா தடுப்பு நடவடிக்கை: தமிழக காவல்துறை அதிகாரிகளுக்கு டி.ஜி.பி. புதிய உத்தரவு

கொரோனா தடுப்பு நடவடிக்கை: தமிழக காவல்துறை அதிகாரிகளுக்கு டி.ஜி.பி. புதிய உத்தரவு
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து தமிழக காவல்துறை அதிகாரிகளுக்கு டி.ஜி.பி. திரிபாதி புதிய உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை,

கொரோனா வைரஸ் தாக்கம் அடுத்த கட்டத்திற்கு செல்லாமல் இருக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று நாடு முழுவதும் சுய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்தநிலையில்  கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் நாடு முழுவதும் 75 மாவட்டங்களை முடக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அத்தியாவசிய தேவை தவிர நாடு முழுவதிலும் உள்ள பல அத்தியாவசியமற்ற கடைகளை மூட உத்தரவிட்டுள்ளது.  இந்தியாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக தமிழக காவல்துறை அதிகாரிகளுக்கு  தமிழக டி.ஜி .பி. திரிபாதி புதிய உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

* காவல் நிலையம் வருவோர்களை கொரோனா சோதனைக்கு உட்படுத்த வேண்டும்.

* 31ஆம் தேதி வரை காவல்துறை ஆலோசனைக் கூட்டம் வேண்டாம். 

* காவல் நிலையத்தில் கிருமி நாசினிகள் கட்டாயம் இருக்க வேண்டும்

* சளி, இருமல், காய்ச்சலுடன் மனு கொடுக்க வருபவர்களை அனுமதிக்க வேண்டாம்.

* கொரோனா பாதிக்கப்பட்டவர்களை அணுக  காவலர்களுக்கு பிரத்யேக உடல் கவசம், முகக்கவசம் வழங்கப்பட உள்ளது.

* தபால், தொலைபேசி, இ-மெயில் மூலமாக தகவல் பரிமாற்றங்களை மேற்கொள்ள வேண்டும்.

* சமூகநலக்கூடங்களில் கூட்டம் நடத்த யாருக்கும் அனுமதி தர வேண்டாம்.

* காவல் நிலையங்களில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனாவிலிருந்து பாதுகாக்க அரசின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வேண்டுகோள்
கொரோனாவில் இருந்து பாதுகாக்க அரசின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
2. கொரோனாவை கட்டுப்படுத்த அமெரிக்கா ரூ.150 லட்சம் கோடி ஒதுக்கியது
அமெரிக்காவில் கொரோனாவை கட்டுப்படுத்த அமெரிக்கா ரூ.150 லட்சம் கோடி ஒதுக்கி உள்ளது. இதற்கான சட்டத்தில் ஜனாதிபதி டிரம்ப் கையெழுத்திட்டார்.
3. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தெண்டுல்கர் ரூ.50 லட்சம் நிதியுதவி
கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் தெண்டுல்கர் ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கி இருக்கிறார்.
4. கொரோனாவுக்கு எதிராக போராடும் சுகாதார ஊழியர்களுக்கு ஜனாதிபதி பாராட்டு
கொரோனாவுக்கு எதிராக போராடும் சுகாதார ஊழியர்களுக்கு ஜனாதிபதி பாராட்டு தெரிவித்தார்.
5. கொரோனாவை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் - எம்.எல்.ஏ. வேண்டுகோள்
கொரோனாவை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று சதன் பிரபாகரன் எம்.எல்.ஏ. கேட்டுக் கொண்டார்.