மாநில செய்திகள்

144 தடை உத்தரவு; ஆம்னி பேருந்துகள் நாளை மாலை வரை இயக்கப்படும்: அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் + "||" + Curfew; Omni buses will be operated till tomorrow evening: Minister MR Vijayabaskar

144 தடை உத்தரவு; ஆம்னி பேருந்துகள் நாளை மாலை வரை இயக்கப்படும்: அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்

144 தடை உத்தரவு; ஆம்னி பேருந்துகள் நாளை மாலை வரை இயக்கப்படும்:  அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்
144 தடை உத்தரவை முன்னிட்டு ஆம்னி பேருந்துகள் நாளை மாலை வரை இயக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அறிவித்து உள்ளார்.
சென்னை,

உலக நாடுகளில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இந்தியாவில் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.  இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 415 ஆக உயர்ந்துள்ளது.  தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.

அவர்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அரசு தரப்பில் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  இதன்படி, தமிழகத்தில் நாளை மாலை 6 மணி முதல் மார்ச் 31ந்தேதி வரை அனைத்து மாவட்ட எல்லைகளை மூட உத்தரவிடப்படுகிறது.

இதேபோன்று, தமிழகத்தில் மக்கள் கூட்டம் கூடுவதை தடுக்கும் வகையில் நாளை மாலை 6 மணி முதல் மார்ச் 31ந்தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.  கொரோனா பற்றிய அறிவுறுத்தலை மீறி மக்கள் வெளியே நடமாடுவதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.  144 தடை உத்தரவை அமல்படுத்த அனைத்து காவல் ஆணையர்களும், ஆட்சியர்களும் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த உத்தரவால், சொந்த ஊருக்கு செல்வோர் உள்ளிட்ட பலதரப்பு மக்கள் பேருந்து நிலையங்களில் திரளாக கூடியுள்ளனர்.  அரசின் தடை உத்தரவால் சொந்த ஊருக்கு திரும்புவதில் அவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது.  இந்நிலையில், போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், 144 தடை உத்தரவை முன்னிட்டு ஆம்னி பேருந்துகள் நாளை மாலை வரை இயக்கப்படும் என அறிவித்து உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க 144 தடை உத்தரவு: அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகள் திறப்பு - இடைவெளி விட்டு வரிசையில் நின்ற மக்கள்
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தேனியில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகள் திறந்து இருந்தன. மக்கள் இடைவெளிவிட்டு வரிசையில் காத்திருந்து பொருட்கள் வாங்கினர்.
2. செங்கத்தில், தடையை மீறியவர்களை தோப்புக்கரணம் போடவைத்த போலீசார்
கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு அறிவித்த 144 தடை உத்தரவைமீறி இருசக்கர வாகனங்களில் சுற்றியவர்களை போலீசார் தோப்புக்கரணம் போடவைத்தனர்.
3. கடையநல்லூரில் 144 தடை உத்தரவை மீறி சாலையில் சுற்றிய 10 பேர் கைது
கடையநல்லூரில் 144 தடை உத்தரவை மீறி சாலைகளில் சுற்றிய 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
4. திருப்பத்தூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறியதாக 9 பேர் மீது வழக்குப்பதிவு - போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தகவல்
திருப்பத்தூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறியதாக 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொ.விஜயகுமார் கூறினார்.
5. தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு: பஸ், கார், ஆட்டோக்கள் ஓடாது - கொரோனா பரவுவதை தடுக்க அரசு அதிரடி நடவடிக்கை
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் இன்று மாலை முதல் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும். பஸ், கார், ஆட்டோக்கள் ஓடாது என்றும், பள்ளி, கல்லூரி தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும், டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.