தேசிய செய்திகள்

டெல்லி ”ஷாகீன் பாக்” பகுதியில் இருந்து சிஏஏ எதிர்ப்பு போராட்டக்காரர்கள் வெளியேற்றம் + "||" + Delhi's Shaheen Bagh, heart of anti-CAA protests, cleared after 101 days amid lockdown over coronavirus

டெல்லி ”ஷாகீன் பாக்” பகுதியில் இருந்து சிஏஏ எதிர்ப்பு போராட்டக்காரர்கள் வெளியேற்றம்

டெல்லி ”ஷாகீன் பாக்” பகுதியில் இருந்து சிஏஏ எதிர்ப்பு போராட்டக்காரர்கள் வெளியேற்றம்
டெல்லி ஷாகீன் பாக் பகுதியில் இருந்து சிஏஏ எதிர்ப்பு போராட்டக்காரர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.
புதுடெல்லி,

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லி ஷாகின் பாக் பகுதியில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.  நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், டெல்லியில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

ஊரடங்கு அமலில் இருப்பதால், போராட்டக்காரர்கள் கலைந்து செல்ல வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தினர். ஆனால், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கலைந்து செல்ல மறுத்தனர். இதனையடுத்து, அவர்களை டெல்லி போலீசார் அப்புறப்படுத்தினர். 101 நாட்களாக ஷாகீன் பாக் பகுதியில்  குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நீடித்து வந்தது குறிப்பிடத்தக்கது.