உலக செய்திகள்

கொரோனா அச்சுறுத்தல்: 3 வாரங்களுக்கு பிரிட்டன் முடக்கம் + "||" + UK goes into three-week lockdown to tackle coronavirus spread

கொரோனா அச்சுறுத்தல்: 3 வாரங்களுக்கு பிரிட்டன் முடக்கம்

கொரோனா அச்சுறுத்தல்:  3 வாரங்களுக்கு பிரிட்டன் முடக்கம்
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 3 வாரங்களுக்கு பிரிட்டன் முடக்கப்படுவதாக அந்நாட்டு பிரதமர் அறிவித்துள்ளார்.
லண்டன், 

சீனாவின் உகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ், இத்தாலியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அமெரிக்கா, பிரிட்டன் போன்ற வல்லரசு நாடுகளும் கொரோனா வைரஸ் பாதிப்புக்குத் தப்பவில்லை. பிரிட்டனில் நாளுக்கு நாள் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

தற்போது வரை கொரோனா தொற்றுக்கு 330-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

இந்நிலையில், கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.  நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலமாக உரையாற்றிய போரிஸ் ஜான்சன்,  3 வாரங்கள் பிரிட்டன் முடக்கப்படுவதாகத் தெரிவித்தார். மேலும், உணவு, மருந்து ஆகிய அத்தியாவசியப் பொருட்களை வாங்க மட்டுமே வீடுகளை விட்டு வெளியே வர அனுமதிக்கப்படுவர் என்று தெரிவித்துள்ளார். 

பொது இடங்களில் இரண்டு நபர்களுக்கு மேல் கூடுவது தடை செய்யப்படுவதாகவும், அரசின் கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா அச்சுறுத்தல்: ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்ற வளாகம் அடைப்பு
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் பூட்டப்பட்டது.
2. கொரோனா அச்சுறுத்தல்; ஊரடங்கு உத்தரவால் வெறிச்சோடிய தூத்துக்குடி
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து தூத்துக்குடி வெறிச்சோடி காணப்பட்டது. முகக்கவசம் அணிந்தவர்கள் மட்டுமே காய்கனி மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்க அனுமதிக்கப்பட்டனர்.
3. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரெயில்கள் மூலம் சொந்த மாநிலங்களுக்கு திரும்பும் தொழிலாளர்கள்
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மும்பையில் வசித்து வரும் வெளிமாநில தொழிலாளர்கள் ரெயில்கள் மூலம் சொந்த ஊருக்கு படையெடுத்து வருகின்றனர்.
4. கொரோனா அச்சுறுத்தலால் 20 பேர் முன்னிலையில் நடந்த வக்கீல் திருமணம்
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் கல்யாணில் குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் என 20 பேர் முன்னிலையில் வக்கீல் ஒருவரின் திருமணம் நடந்து உள்ளது.
5. கேன்ஸ் திரைப்பட விருது விழா ஒத்திவைப்பு
கேன்ஸ் திரைப்பட விருது வழங்கும் விழா கொரோனா அச்சம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.