மாநில செய்திகள்

கொரோனா: குடும்ப அட்டை தாரர்களுக்கு ரூ.1000 நிவாரணமாக முதல்-அமைச்சர் பழனிசாமி அறிவிப்பு + "||" + chief Minister Palanisamy announces relief for family card holders

கொரோனா: குடும்ப அட்டை தாரர்களுக்கு ரூ.1000 நிவாரணமாக முதல்-அமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

கொரோனா: குடும்ப அட்டை தாரர்களுக்கு ரூ.1000 நிவாரணமாக முதல்-அமைச்சர் பழனிசாமி அறிவிப்பு
கொரோனா நடவடிக்கையால் தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1000 நிவாரணமாக வழங்கப்படும் என முதல்-அமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

சென்னை,

முதல்-அமைச்சர் பழனிசாமி சட்டபேரவையில் கூறியதாவது:-

* கொரோனா:  தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா  ரூபாய் 1000 வழங்கப்படும்.

* நடைபாதை வியாபாரிகளுக்கு பொது நிவாரண நிதி ரூ.1000 மற்றும் கூடுதலாக ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும்.

*ரேசன் கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க டோக்கன் முறையில் பொருட்கள் வழங்கப்படும்.

* ஆதரவற்றோருக்கு அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று உணவு வழங்கப்படும்.

* அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும்  மார்ச் மாத ரேசன் பொருட்களை ஏப்ரல் மாதம் பெற்றுக்கொள்ளலாம். விலையில்லா அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும்.

*ஆட்டோ தொழிலாளர்களுக்கு 17 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, சமையல் எண்ணெய் வழங்கப்படும்.

* ஆட்டோ தொழிலாளர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும்.

* நடைபாதை வியாபாரிகளுக்கு ரூ.1000 வழங்கப்படும்.

* 100 நாட்கள் வேலை திட்டத்தில் 2 நாட்கள் கூடுதல் சம்பளம் வழங்கப்படும்.

* கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 144 தடை அமலாக உள்ளதால் சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார்.

* கொரொனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக ரூ.3,250 கோடி நிவாரண நிதியாக ஒதுக்கப்பட்டுள்ளது.