தேசிய செய்திகள்

தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு இருந்த ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா விடுவிப்பு + "||" + Omar Abdullah released after nearly 8 months of detention

தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு இருந்த ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா விடுவிப்பு

தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு இருந்த ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா விடுவிப்பு
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி உமர் அப்துல்லா மீதான பொது பாதுகாப்பு சட்ட நடவடிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீநகர், 

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த அரசியலமைப்பு சட்ட பிரிவுகள் 370 மற்றும் 35-ஏவை ரத்து செய்தும், அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தும் மத்திய அரசு கடந்த ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி அதிரடி நடவடிக்கை எடுத்தது. அதைத்தொடர்ந்து காஷ்மீரில் விரும்பத்தகாத செயல்கள் நடந்துவிடாதபடிக்கு, அந்த மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரிகள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோர் உடனடியாக தடுப்புக்காவலில் (வீட்டு சிறைவாசம்) வைக்கப்பட்டனர்.

பரூக் அப்துல்லா, அவரது மகன் உமர் அப்துல்லா ஆகியோர்  பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இந்த சட்டம், ஒருவரை கைது செய்து விசாரணையின்றி 3 மாதங்கள் காவலில் வைக்க அதிகாரிகளுக்கு அதிகாரம் அளித்துள்ளது. மேலும் இந்த காவலை 2 ஆண்டுகள்வரை நீட்டிக்கவும் முடியும். 

இந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு பருக் அப்துல்லா மீதான பொது பாதுகாப்பு சட்டம் ரத்து செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து பரூக் அப்துல்லா வீட்டுக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில், உமர் அப்துல்லா மீதான பொது பாதுகாப்பு சட்ட நடவடிக்கையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, சுமார்  8 மாதங்களுக்கு பிறகு உமர் அப்துல்லா விடுவிக்கப்பட்டார். 

தொடர்புடைய செய்திகள்

1. உமர் அப்துல்லா தடுப்புக்காவலுக்கு எதிராக மனு ; உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை
உமர் அப்துல்லா தடுப்புக்காவலுக்கு எதிராக அவரது சகோதரி தாக்கல் செய்த மனுவை இன்று உச்ச நீதிமன்றம் விசாரிக்கிறது.
2. உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி மீதும் பாய்ந்தது பொது பாதுகாப்பு சட்டம்
பரூக் அப்துல்லாவை தொடர்ந்து உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி மீதும் கடுமையான பொது பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது.
3. 5 மாதமாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த காஷ்மீர் அரசியல் கட்சி தலைவர்கள் 4 பேர் விடுவிப்பு
5 மாதமாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த காஷ்மீர் அரசியல் கட்சி தலைவர்கள் 4 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.