தேசிய செய்திகள்

நாட்டு மக்களிடம் இன்று இரவு 8 மணிக்கு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி + "||" + Will address the nation at 8 PM today, on vital aspects relating to the menace of COVID-19: Prime Minister Narendra Modi

நாட்டு மக்களிடம் இன்று இரவு 8 மணிக்கு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

நாட்டு மக்களிடம் இன்று இரவு 8 மணிக்கு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி
நாடு முழுவதும் கொரொனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில் நாட்டு மக்கள் மத்தியில் பிரதமர் மோடி இன்று இரவு உரையாற்ற உள்ளார்.
புதுடெல்லி,

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. நாட்டில் உள்ள 23 மாநிலங்கள் 7 யூனியன் பிரதேசங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மாநில எல்லைகள் மூடப்பட்டுள்ளன. 

இந்த நிலையில், நாட்டு மக்கள் மத்தியில் பிரதமர் மோடி இன்று உரையாற்றுகிறார். ஏற்கனவே, கடந்த 19 ஆம் தேதி நாட்டு மக்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, மக்கள் ஊரடங்கை கடைபிடிக்க வலியுறுத்தி இருந்தார். 

முன்னதாக, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை, மக்கள் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை. அரசின் உத்தரவுகளைப் பின்பற்றுவதில்லை என்று பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்து இருந்தார். இந்த சூழலில், பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. 


தொடர்புடைய செய்திகள்

1. உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்கவே கடுமையான கட்டுப்பாடுகள் : பிரதமர் மோடி
உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்கவே கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
2. ஊரடங்கு உத்தரவுக்கு நான் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்: பிரதமர் மோடி
ஊரடங்கு உத்தரவு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
3. கொரோனாவை எதிர்த்து போராட இந்தியா உள்பட 64 நாடுகளுக்கு கூடுதல் நிதி- அமெரிக்கா
கொரோனாவை எதிர்த்து போராட இந்தியாவுக்கு கூடுதல் நிதியை அமெரிக்கா ஒதுக்கியுள்ளது.
4. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 149 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 873 ஆக உயர்ந்துள்ளது.
5. ரிசர்வ் வங்கி எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு பிரதமர் மோடி வரவேற்பு
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ரிசர்வ் வங்கி எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார்.