தேசிய செய்திகள்

மத்திய பிரதேசம்; நம்பிக்கை வாக்கெடுப்பில் சிவராஜ் சிங் சவுகான் வெற்றி + "||" + BJP leader Shivraj Singh Chouhan wins confidence motion unanimously in Madhya Pradesh assembly for his fourth term as Chief Minister

மத்திய பிரதேசம்; நம்பிக்கை வாக்கெடுப்பில் சிவராஜ் சிங் சவுகான் வெற்றி

மத்திய பிரதேசம்;  நம்பிக்கை வாக்கெடுப்பில் சிவராஜ் சிங் சவுகான் வெற்றி
மத்திய பிரதேசத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல் மந்திரி சிவராஜ்சிங் சவுகான் வெற்றி பெற்றார்.
போபால், 

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் 22 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததால் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்தது. நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ள முடியாத நிலையில், கமல்நாத் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து பாஜக ஆட்சியமைக்கும் முயற்சியில் இறங்கியது.

பாஜகவின் சட்டமன்ற குழு கூட்டத்தில், சட்டமன்ற கட்சி தலைவராக சிவராஜ் சிங் சவுகான் தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து அவர் நேற்று  இரவு முதல் மந்திரியாக பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் லால்ஜி டாண்டன் பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.  

இதன்மூலம் 4-வது முறையாக மத்திய பிரதேச முதல் மந்தியாக அவர் பொறுப்பேற்றார்.  இந்த நிலையில், மத்திய பிரதேச சட்டமன்றம் இன்று கூடியது.  இக்கூட்டத்தில் சிவராஜ் சிங் சவுகான் தனது அரசுக்கான பெரும்பான்மையை  நிரூபித்தார்.  நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் புறக்கணித்தனர்.  சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சி கட்சி எம்.எல்.ஏக்களும் சிவராஜ் சிங்கிற்கு ஆதரவளித்தனர். 

தொடர்புடைய செய்திகள்

1. மத்திய பிரதேச முதல் அமைச்சர் பொறுப்பில் இருந்து விலகுவதாக கமல்நாத் அறிவிப்பு
மத்திய பிரதேச முதல் அமைச்சர் பொறுப்பில் இருந்து விலகுவதாக கமல்நாத் அறிவித்துள்ளார்.
2. மத்தியபிரதேச சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மத்திய பிரதேச சட்ட சபையில் இன்று மாலை 5.30 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது.
3. மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் அரசு தப்புமா? - சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு
மத்திய பிரதேசத்தில் முதல்-மந்திரி கமல்நாத் சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார். எனவே அவரது தலைமையிலான காங்கிரஸ் அரசு தப்புமா? என்பது இன்று தெரிந்துவிடும்.22 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா
4. மத்தியப் பிரதேசத்தில் அரசியல் நெருக்கடி; 92 எம்.எல்.ஏக்களை ராஜஸ்தான் அழைத்துச்சென்றது காங்கிரஸ்
ஜோதிர் ஆதித்ய சிந்தியாவின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 22 பேர் ராஜினாமாவால் மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு சிக்கல் எழுந்துள்ளது.
5. ஆட்சியைக் கவிழ்க்க சதி செய்கிறார்கள்: பாஜக மீது ம.பி முதல்வர் கமல்நாத் பாய்ச்சல்
மாஃபியாக்கள் ஆதரவுடன் ஆட்சியை கவிழ்க்க சதி நடப்பதாக மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் தெரிவித்துள்ளார்.