மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15ஆக உயர்வு + "||" + Corona impact in Tamil Nadu increased to 15

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15ஆக உயர்வு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15ஆக உயர்வு
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை,

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12-ல் இருந்து 15 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் இருந்து வந்த இருவருக்கும், சுவிட்சர்லாந்தில் இருந்து வந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் இருந்து திரும்பிய 74 வயது முதியவர்,  52 வயது பெண் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

சுவிட்சர்லாந்தில் இருந்து திரும்பிய 25 வயது பெண் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவில் இருந்து திரும்பிய 74 வயது முதியவர் போரூரை சேர்ந்தவர் என்பதும், 52 வயது பெண் புரசவைவாக்கத்தை சேர்ந்தவரும், 

சுவிட்சர்லாந்தில் இருந்து திரும்பிய  25 வயது பெண் கீழ்கட்டளை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.

உலகளவில் கொரோனா பாதிப்பு 3,82,358 ஆக உயர்ந்த நிலையில் 1,02,505 பேர் குணமடைந்துள்ளனர். உலகளவில் கொரொனா வைரஸ் பாதிப்பால் உயிரிழ்ந்தோர் எண்ணிக்கை 16,588 ஆக அதிகரித்துள்ளது.