தேசிய செய்திகள்

வருமான வரி தாக்கல் செய்ய கடைசிநாள்: ஜூன் 30-ம் தேதியாக நீட்டிப்பு + "||" + The last date for the income tax return for the financial year 18-19 is extended to 30th June 2020.

வருமான வரி தாக்கல் செய்ய கடைசிநாள்: ஜூன் 30-ம் தேதியாக நீட்டிப்பு

வருமான வரி தாக்கல் செய்ய கடைசிநாள்: ஜூன் 30-ம் தேதியாக நீட்டிப்பு
வருமான வரி தாக்கல் செய்ய கடைசிநாள் ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
புதுடெல்லி

உலக நாடுகளை விழி பிதுங்க வைத்து வரும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் நாளுக்கு நாள் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் உள்ள 560 மாவட்டங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 490-ஆக உயர்ந்துள்ளது. 

பிரதமர் மோடியின் வேண்டுகோள்படி மக்கள் தாமாக முன்வந்து சுய ஊரடங்கை நடைமுறைப்படுத்தினர். இதன் தொடர்ச்சியாக நாடுமுழுவதும் 100-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் கரோனா தொற்று அதிகம் பரவும் பகுதியாக கண்டறியப்பட்டு மற்ற பகுதிகளில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவி வரும் சூழ்நிலையில் தொழில்பாதிப்பு, பொருளாதார சிக்கல் ஏற்பட்டு வரும் நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

அதன்படி நடப்பு நிதியாண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை மார்ச் 31-ம் தேதியில் இருந்து ஜூன் 30-ம் தேதியாக நீட்டித்து அவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதுபோல்  மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கான ஜிஎஸ்டி கணக்கை தாக்கல் செய்ய ஜூன் 30 வரை கால அவகாசம் நீட்டிக்கபடும்
என கூறி உள்ளார்.

அது போல் ஆதார் - பான்கார்டு இணைப்புக்கான கால அவகாசம் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது