தேசிய செய்திகள்

புதுச்சேரியில் தேவைப்பட்டால் துணை ராணுவப்படை உதவி கோரப்படும்; முதல் அமைச்சர் நாராயணசாமி + "||" + CM Narayanasamy to request paramilitary assistance in Puducherry

புதுச்சேரியில் தேவைப்பட்டால் துணை ராணுவப்படை உதவி கோரப்படும்; முதல் அமைச்சர் நாராயணசாமி

புதுச்சேரியில் தேவைப்பட்டால் துணை ராணுவப்படை உதவி கோரப்படும்; முதல் அமைச்சர் நாராயணசாமி
புதுச்சேரியில் தேவைப்பட்டால் துணை ராணுவப்படை உதவி கோரப்படும் என முதல் அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.
புதுச்சேரி,

புதுவை அரசு கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை தடுக்க நேற்று முன்தினம் இரவு முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது.  கூட்டமாக கூடக்கூடாது என்று போலீசார் எச்சரித்தும் யாரும் பொருட்படுத்தவில்லை.

இதனையடுத்து, அதிகாரிகளுடன் முதல் அமைச்சர் நடத்திய ஆலோசனைக்கு பின்னர், புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவு நேற்று இரவு 9 மணி முதல் அமலுக்கு வந்தது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்த உத்தரவு வருகிற 31ந்தேதி வரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

இதுபற்றி முதல் அமைச்சர் கூறும்பொழுது, நேற்று முன்தினம் இரவு 9 மணிமுதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மக்களை தனிமைப்படுத்த வேண்டும். இதைவிட வேறு மருத்துவம் இல்லை.

ஆனால் அதை மக்கள் அலட்சியப்படுத்துகிறார்கள். அவ்வாறு இருந்தால் பெரிய அளவில் தாக்கம் ஏற்படும். நேற்று முன்தினம் ஒரே நாளில் 700 பேர் இறந்துள்ளனர். சீனாவில் ராணுவத்தைக்கொண்டு மக்களை கட்டுப்படுத்தி உள்ளனர். புதுவை மாநிலத்தில் கடந்த 3 நாட்களாக வேறு யாருக்கும் பாதிப்பு இல்லை என கூறினார்.

இந்நிலையில் முதல் அமைச்சர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், யாரேனும் தேவையின்றி வெளியே நடமாடினால் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பொதுமக்களுக்கு உயிரை பற்றி கவலையில்லை என வேதனை தெரிவித்து உள்ள அவர், 144 தடை உத்தரவுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.  புதுச்சேரியில் தேவைப்பட்டால் துணை ராணுவப்படை உதவி கோரப்படும் என கூறியுள்ளார்.