மாநில செய்திகள்

காவலர்கள் தினப்படி ரூ.500 ஆக உயர்வு; முதல் அமைச்சர் பழனிசாமி அறிவிப்பு + "||" + Rs. 500 per day for guards; Announced by CM Palanisamy

காவலர்கள் தினப்படி ரூ.500 ஆக உயர்வு; முதல் அமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

காவலர்கள் தினப்படி ரூ.500 ஆக உயர்வு; முதல் அமைச்சர் பழனிசாமி அறிவிப்பு
காவலர்களுக்கு வழங்கப்படும் தினப்படி ரூ.500 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது என முதல் அமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
சென்னை,

உலகம் முழுவதும் தொற்று நோயாக பரவியுள்ள கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 15 ஆயிரத்திற்கும் கூடுதலாக சென்றுள்ளது.  இதுவரை 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்து உள்ளனர்.  இந்தியாவில் 492 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.  இதன் பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.  கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக ரூ.3 ஆயிரத்து 250 கோடி நிவாரண நிதியாக ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி, தமிழக மக்கள் கொரோனா பரவாமல் தடுக்க அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.  கொரோனா விவகாரத்தில் பொதுமக்கள் அலட்சியம் காட்ட வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் சட்டசபையில் இன்று பேசியதாவது:

கொரோனா தடுப்பு பணியில் உள்ள மருத்துவர்கள், சுகாதார பணியாளர்களுக்கு சிறப்பூதியம் ஆக, ஒரு மாத ஊதியம் வழங்கப்படும் என முதல் அமைச்சர் சட்டசபையில் அறிவித்துள்ளார்.

இதேபோன்று, காவலர்களுக்கு வழங்கப்படும் தினப்படி ரூ.500 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது என அவர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் 6 நடமாடும் தடய அறிவியல் ஆய்வகங்கள் அமைக்கப்படும்.  10 இடங்களில் புதிய தீயணைப்பு நிலையங்கள் அமைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஜப்பான் கப்பலில் கொரோனா வைரஸ் பாதித்த இந்தியர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்வு
ஜப்பான் துறைமுகத்தில் நிறுத்தியுள்ள சொகுசு கப்பலில் கொரோனா வைரஸ் பாதித்த இந்தியர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.