தேசிய செய்திகள்

கொரோனா அச்சுறுத்தல் எதிரொலி - மாநிலங்களவை தேர்தல் ஒத்தி வைப்பு + "||" + Rajya Sabha elections postponed over coronavirus lockdown

கொரோனா அச்சுறுத்தல் எதிரொலி - மாநிலங்களவை தேர்தல் ஒத்தி வைப்பு

கொரோனா அச்சுறுத்தல் எதிரொலி - மாநிலங்களவை தேர்தல் ஒத்தி வைப்பு
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மார்ச் 26 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த மாநிலங்களவைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சென்னை,

நாடு முழுவதும் காலியாக உள்ள 55 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு மார்ச் 26-ம் தேதி (நாளை மறுநாள்) தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. 

இதற்கான வேட்பு மனுக்கள் பெறப்பட்டு, இறுதி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில், 37 வேட்பாளர்கள் போட்டியின்றி வெற்றி பெற்று எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள உறுப்பினர் பதவிகளுக்கு, தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.

இந்தநிலையில்,  கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, ஒன்று கூடுவதை தவிர்க்கும் பொருட்டு, மார்ச் 26 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த மாநிலங்களவைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் அலுவலர்கள் மற்றும் வேட்புமனு தாக்கல் செய்துள்ள வேட்பாளர்கள் செல்லத்தக்கவை என கூறப்பட்டுள்ளது. புதிய தேர்தல் தேதி மற்றும் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நாள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் பல்வேறு மாநிலங்களில் 144 தடை உத்தரவு, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்கள் முடக்கப்பட்டுள்ளன. பேருந்து, ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது  என்பது குறிப்பிடத்தக்கது.