தேசிய செய்திகள்

கொரோனா நடவடிக்கை: அனைத்து மாநில அரசுகளுக்கும், மத்திய அரசு அறிவுரை + "||" + Central Government has asked all State Governments to deploy fiscal resources for establishing additional medical facilities such as hospitals

கொரோனா நடவடிக்கை: அனைத்து மாநில அரசுகளுக்கும், மத்திய அரசு அறிவுரை

கொரோனா நடவடிக்கை: அனைத்து மாநில அரசுகளுக்கும், மத்திய அரசு அறிவுரை
மருத்துவமனைகளில் கூடுதல் வசதிகளை ஏற்படுத்த தேவையான நிதி ஒதுக்க வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
புதுடெல்லி,

இந்தியாவில் பரவியுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அனைத்து மாநில அரசுகளுக்கும், மத்திய அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

* மருத்துவமனைகள், பரிசோதனை மையங்கள், தனி வார்டுகள் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருங்கள்.

* கொரோனா வைரசை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உத்தரவிடுங்கள்.

* செயற்கை சுவாச கருவிகள், தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள், முக கவசங்கள், மருந்துகளை தயாராக வைத்திருங்கள்.

* மருத்துவமனைகளில் கூடுதல் வசதிகளை ஏற்படுத்த தேவையான நிதி ஒதுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.