மாநில செய்திகள்

144 தடை உத்தரவு அமலாக்கம்; தமிழக தலைமை செயலாளர் தலைமையில் ஆலோசனை + "||" + 144 Prohibition Enforcement; Advice led by the Chief Secretary of Tamil Nadu

144 தடை உத்தரவு அமலாக்கம்; தமிழக தலைமை செயலாளர் தலைமையில் ஆலோசனை

144 தடை உத்தரவு அமலாக்கம்; தமிழக தலைமை செயலாளர் தலைமையில் ஆலோசனை
தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமலாக்கம் பற்றி தலைமை செயலாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது.
சென்னை,

சீனாவில் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் 170க்கும் மேற்பட்ட உலக நாடுகளுக்கு பரவியுள்ளது.  கொரோனா வைரஸ் தொற்றுநோயால் உலகளாவிய பலி எண்ணிக்கை 16 ஆயிரத்திற்கும் மேல் சென்றுள்ளது.  உலகெங்கிலும் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 492 ஆக அதிகரித்து உள்ளது.  இதனை தொடர்ந்து நாடு முழுவதும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.  நாடு முழுவதற்கும் ரெயில் சேவை வருகிற 31ந்தேதி வரை ரத்து செய்யப்பட்டு உள்ளன.  பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் 144 தடை உத்தரவு இன்று மாலை 6 மணியளவில் அமலாகிறது.  இதனை தொடர்ந்து, இதுபற்றி தமிழக தலைமை செயலாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது.

இந்த கூட்டத்தில் அனைத்து துறை செயலாளர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.  தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படும் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய விசயங்கள் ஆகியவை பற்றி ஆலோசிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. வெங்கையாநாயுடு 26-ந்தேதி வருகை அதிகாரிகளுடன் நாராயணசாமி ஆலோசனை
புதுச்சேரி பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவுக்கு 26-ந்தேதி துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வருவதையொட்டி அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆலோசனை நடத்தினார்.
2. கொரோனா வைரஸ் குறித்து குமரி கலெக்டருடன், அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை காணொலி காட்சி மூலம் நடந்தது
கொரோனா வைரஸ் தொடர்பாக குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரேவுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.
3. அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து தீவிர ஆலோசனை: அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் நடந்தது
அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து தீவிர ஆலோசனை நடந்தது.
4. துணை முதல்-மந்திரி பதவி ரத்து குறித்து ஆலோசனை நடக்கவில்லை - கோவிந்த் கார்ஜோள் பேட்டி
துணை முதல்-மந்திரி பதவியை ரத்து செய்வது குறித்து ஆலோசனை நடக்கவில்லை என்று கோவிந்த் கார்ஜோள் கூறினார். துணை முதல்-மந்திரி கோவிந்த் கார்ஜோள் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
5. உத்தவ் தாக்கரே- சரத்பவார் ஆலோசனை - 30-ந் தேதி மந்திரி சபை விரிவாக்கம்?
முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, சரத்பவார் நேற்று ஆலோசனை நடத்தினார்கள். 30-ந் தேதி மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்படலாம் என தெரிகிறது.