மாநில செய்திகள்

அனைத்து துறை செயலாளர்களுடன் தலைமை செயலாளர் அவசர ஆலோசனை + "||" + Chief Secretary Emergency Consultation with all Department Secretaries

அனைத்து துறை செயலாளர்களுடன் தலைமை செயலாளர் அவசர ஆலோசனை

அனைத்து துறை செயலாளர்களுடன் தலைமை செயலாளர் அவசர ஆலோசனை
அனைத்து துறை செயலாளர்களுடன் தலைமை செயலாளர் சண்முகம் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.
சென்னை,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் இன்று மாலை  6 மணி முதல் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும். பஸ், கார், ஆட்டோக்கள் ஓடாது என்றும், பள்ளி, கல்லூரி தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும், டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தநிலையில்  ஊரடங்கு அமலாக உள்ள நிலையில், அனைத்து துறை செயலாளர்களுடன் தலைமை செயலாளர் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். 

இந்த ஆலோசனை கூட்டத்தில்  தடை காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தலைமைச்செயலாளர் சண்முகம் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.  மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமலாக உள்ள நிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.