தேசிய செய்திகள்

இந்தியாவில் 21 நாட்கள் வரை முழு ஊரடங்கு; பிரதமர் மோடி உரை + "||" + India continues to freeze today from 12 noon to 21 days; PM Modi's speech

இந்தியாவில் 21 நாட்கள் வரை முழு ஊரடங்கு; பிரதமர் மோடி உரை

இந்தியாவில் 21 நாட்கள் வரை முழு ஊரடங்கு; பிரதமர் மோடி உரை
இந்தியாவில் இன்று நள்ளிரவு 12 மணிமுதல் 21 நாட்கள் வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என பிரதமர் மோடி உரையில் கூறியுள்ளார்.
புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றி இன்றிரவு 8 மணியளவில் உரையாற்ற தொடங்கினார்.  அவர் பேசும்பொழுது, மக்கள் ஒரு நாள் ஊரடங்கை ஏற்று கடைப்பிடித்தது, நாட்டு முன் மற்றும் மனித குலத்திற்கு முன் தோன்றும் எந்தவொரு பிரச்சனைக்கு எதிராகவும் போராட, இந்தியர்களாகிய நாம் எப்படி ஒன்றிணைந்தோம் என்பது வெளிப்பட்டு உள்ளது.

ஒவ்வொரு இந்தியனும் பொறுப்புடன் பங்காற்றி ஒரே நாடாக நாம் இதனை நிறைவேற்றி உள்ளோம்.

கொரோனா வைரசை தடுத்து நிறுத்த மற்றும் பாதுகாப்புடன் இருப்பதற்கு சமூகத்தில் ஒவ்வொருவரும் தனித்திருக்க வேண்டும் என்பதே ஒரே வழியாகும்.  ஒவ்வொருவரும் மற்றவரிடம் இருந்து தொலைவில் இருங்கள்.  உங்களது வீடுகளில் இருங்கள்.

இந்தியா இன்று நள்ளிரவு 12 மணிமுதல் 21 நாட்கள் வரை 3 வாரங்கள் தொடர்ந்து முடக்கப்படுகிறது என கூறியுள்ளார்.