தேசிய செய்திகள்

கொரோனா பரவ தொடங்கினால் தடுப்பது பெரிய சவால்; பிரதமர் மோடி உரை + "||" + The biggest challenge is to prevent the corona from spreading; PM Modi's speech

கொரோனா பரவ தொடங்கினால் தடுப்பது பெரிய சவால்; பிரதமர் மோடி உரை

கொரோனா பரவ தொடங்கினால் தடுப்பது பெரிய சவால்; பிரதமர் மோடி உரை
கொரோனா பரவ தொடங்கினால் அதனை தடுத்து நிறுத்துவது என்பது பெரிய சவால் என பிரதமர் மோடி உரையில் கூறியுள்ளார்.
புதுடெல்லி,

சீனாவில் தோன்றி உலக நாடுகளில் பெரும் பாதிப்பு ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் 160க்கும் மேற்பட்ட நாடுகளில் தீவிர தாக்கம் ஏற்படுத்தி உள்ளது.  தொடர்ந்து இதனால் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.  இதுவரை உலக அளவில் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.  3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

சீனா தவிர்த்து, இத்தாலி, ஸ்பெயின், தென்கொரியா மற்றும் ஈரான் போன்ற நாடுகளில் வைரஸ் பாதிப்பு அதிகரித்து உள்ளது.  சீனாவில் பாதிப்பு பெருமளவில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது.  இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 519 ஆக உயர்வடைந்து உள்ளது.

இதனால் அதனை கட்டுக்குள் கொண்டு வர நாடு முழுவதிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.  

பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றி இன்றிரவு 8 மணியளவில் உரையாற்றினார்.  அவர் பேசும்பொழுது, இப்பொழுது கொரோனா வைரஸ் தாக்கினால், அதை தெரிந்து கொள்ள நமக்கு 14 நாட்கள் ஆகும்.  அதனால் 21 நாட்கள் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.  21 நாட்கள் நம்மை நாம் தனிமைப்படுத்தாவிட்டால் 21 ஆண்டுகள் பின்னோக்கி சென்று விடுவோம்.

ஒருவருக்கு கொரோனா தாக்கினால், அது காட்டுத்தீ போல பரவும்.  ஒருவரை தாக்கும் கொரோனா, 67 நாட்களில் ஒரு லட்சம் பேரை தாக்கும்.

அடுத்த 11 நாட்களில் மேலும் ஒரு லட்சம் பேரை தாக்கும்.  இதன் மூலம், கொரோனா எவ்வளவு வேகமாக பரவும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

நீங்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால், கொரோனா உங்களை தாக்க கூடும்.  அதனால், நீங்களே ஒரு லட்சுமண ரேகையை போட்டு கொள்ளுங்கள் என பேசியுள்ளார்.