தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 536 ஆக உயர்வு: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் + "||" + Coronavirus number in India rises to 536: Indian Medical Research Council

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 536 ஆக உயர்வு: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 536 ஆக உயர்வு: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 536 ஆக உயர்ந்துள்ளதாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,

உலகம் முழுவதும் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கைகள் எடுத்துவருகின்றன.

32 மாநிலங்கள் மற்றும் யூனியன்பிரதேசங்கள் 31-ந் தேதி வரை முழுமையாக அடைக்கப்பட்டுள்ளன. கேரள அரசும், உத்தரபிரதேச அரசும் நேற்று மாநிலம் முழுமையும் தடை உத்தரவை அமல்படுத்தின. அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற அனைத்தையும் மூடும்படி உத்தரவிட்டுள்ளன.


நாடு முழுவதும் விமானம், பஸ், ரெயில், கார், ஆட்டோ போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. கடைகள், தொழிற்சாலைகள், நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து குஜராத் மாநிலம் ஆமதாபாத்துக்கு திரும்பியிருந்த 65 வயது முதியவருக்கு காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் இருந்ததால் மும்பையில் உள்ள கஸ்தூரிபா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.

அவருக்கு ஏற்கனவே உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு இருந்ததாகவும் கூறப்படுகிறது. எனவே அவர் கொரோனா வைரஸ் காரணமாக இறக்கவில்லை என சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

இந்தியா முழுவதும் 536 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.. இதில் மோசமாக பாதிக்கப்பட்டவர்கள் 470 பேர், குணமடைந்து வீடு திரும்பியவர்கள் 40 பேர், வெளி நாடுகளை சேர்ந்தவர்கள் 43 பேர் என்றும், பலி எண்ணிக்கை 9 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் அதிகபட்சமாக 105 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது. இதில் ஒரு சுகாதார ஊழியரும் அடங்குவார். அடுத்ததாக மராட்டியத்தில் 89 பேர், கர்நாடகத்தில் 37 பேர், தெலுங்கானாவில் 35 பேர், ராஜஸ்தானில் 32 பேர், உத்தரபிரதேசத்தில் 33 பேர், குஜராத்தில் 33 பேர், டெல்லியில் 30 பேர், அரியானாவில் 28 பேர், பஞ்சாபில் 29 பேர், லடாக்கில் 13 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கேரளாவில் 4 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும், அவர்களில் 3 பேர் சீனாவின் உகான் நகரில் இருந்து வந்தவர்கள் என்றும் முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்தார்.

முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ள பல மாநிலங்களில் இன்னும் அத்தியாவசிய தேவையற்ற நபர்கள் வெளியில் நடமாடுவதாக தெரியவந்தது. ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள் ஆகியவைகளில் மக்கள் சிலர் சென்றுகொண்டிருந்ததையும் பார்க்க முடிந்தது. அவர்களை வீட்டுக்கு திருப்பி அனுப்புவது போலீசாருக்கு சவாலானதாக இருந்தது.

ஐதராபாத்தில் ரோட்டில் நடமாடிய சிலரை போலீசார், பெண் போலீசார் முன்னிலையில் ‘சிட்-அப்ஸ்’ உடற்பயிற்சி செய்யும்படி நூதன தண்டனை வழங்கினார்கள். சில இடங்களில் வெளியில் நடமாடியவர்களை போலீசார் லேசான தடியடி நடத்தியும் திருப்பி அனுப்பினர்.

இதுபற்றி மத்திய அரசின் உயர் அதிகாரி ஒருவர் சில மாநில முதல்-மந்திரிகளுடன் பேசினார். அப்போது அவர், மக்கள் தேவையின்றி வெளியில் நடமாடினால் தேவைப்பட்டால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கும்படியும் கூறியதாக தெரிகிறது.

மத்திய சுகாதார மந்திரி ஹர்ஷவர்த்தன் தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள கட்டுப்பாட்டு மையம், ஆய்வகம் ஆகியவற்றை பார்வையிட்டார். அப்போது கொரோனா வைரஸ் நோயாளிகள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் ஆகியோரின் நிலைமை பற்றி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

நாடு முழுவதும் ஒரு லட்சத்து, 87 ஆயிரத்து, 904 பேர் கண்காணிப்பில் இருந்தனர். இவர்களில் 35,073 பேர் 28 நாட்கள் கண்காணிப்பு காலத்தை முடித்துவிட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 724 ஆக அதிகரிப்பு
இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 724 ஆக அதிகரித்துள்ளது.
2. தமிழர் உள்பட 10 பேர் பலி: இந்தியாவில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 600-ஐ தாண்டியது
இந்தியாவில் கொரோனாவால் பலியானவர் எண்ணிக்கை 10 ஆகியிருக்கும் நிலையில், தொற்று பாதித்தவர் எண்ணிக்கையும் 600-ஐ தாண்டி உள்ளது.
3. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 562 ஆக உயர்வு
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 562 ஆக உயர்ந்துள்ளது.
4. ஈரானில் இருந்து அழைத்து வரப்பட்ட 277 இந்தியர்கள் ஜோத்பூர் வந்தடைந்தனர்
ஈரானில் இருந்து அழைத்து வரப்பட்ட 277 இந்தியர்கள் ஜோத்பூர் வந்தடைந்தனர்
5. கோலாலம்பூரில் சிக்கி தவித்த 116 இந்தியர்கள் - சிறப்பு விமானம் மூலம் சென்னை வருகை
கோலாலம்பூரில் சிக்கி தவித்த 116 இந்தியர்கள் சிறப்பு விமானம் மூலம் சென்னை வருகை தந்தனர்.