மாநில செய்திகள்

கொரோனா வைரஸ் பாதிப்பு: தமிழகத்தில் முதல் நபர் உயிரிழப்பு + "||" + Coronavirus infection: first person death in Tamil Nadu

கொரோனா வைரஸ் பாதிப்பு: தமிழகத்தில் முதல் நபர் உயிரிழப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பு: தமிழகத்தில் முதல் நபர் உயிரிழப்பு
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, தமிழகத்தில் மதுரையை சேர்ந்த முதல் நபர் உயிரிழந்தார்.
மதுரை,

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 536 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11ஆக உயர்ந்து உள்ளது.

இந்த சூழலில் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்றுடன் தமிழகத்தில் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் 18 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் மதுரையை சேர்ந்த 54 வயதுடைய ஒருவர் கடந்த சில நாட்களாக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.


இந்தநிலையில் அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நேற்று இரவில் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவித்து இருந்தார்.

இந்தநிலையில் கொரோனா பாதித்த 54 வயதான மதுரை நபரின் உடல்நிலை மோசமாக இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

முன்னதாக அவருக்கு கொரோனா சிறப்பு பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவருடைய மனைவி மற்றும் மகன் ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றனர். அந்த நபருக்கு ஏற்கெனவே இதர உடல்நிலை பிரச்சனைகள் இருந்தன. மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் அவர் இருந்து வந்தார்.

ஏற்கனவே நீரழிவு போன்ற பாதிப்புகள் இருந்ததால் அவரை காப்பாற்ற முடியவில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

மதுரையில் கொரோனா பாதிப்பால் இறந்தவர் வெளியூர் பயணம் தொடர்பான சரியான தகவல் முதலில் கிடைக்க பெறவில்லை. இருப்பினும் அரசின் துரித நடவடிக்கையால் அவருடைய கொரோனா தொடர்பு கண்டுபிடிக்கப்பட்டது. ஈரோடு பெருந்துறையில் கொரோனா தொற்று இருந்த தாய்லாந்து நாட்டை சேர்ந்த 2 பேருடன் மதுரையை சேர்ந்தவருக்கு தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதன் முலம்தான் கொரோனா தொற்று ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் 42 பேருக்கு கொரோனா பாதிப்பு; நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு என்ன?
தமிழகத்தில் 42 கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது 39 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இருவர் குணமாகியுள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
2. கன்டெய்னர் லாரிகளில் பதுங்கி சென்ற பயணிகள் - கையும் களவுமாக பிடித்த போலீஸ்
மராட்டியத்தில் கன்டெய்னர் லாரிகளில் பதுங்கி சென்ற பயணிகளை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.
3. தமிழகத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
4. தமிழகம் முழுவதும் தடையை மீறி வெளியே சுற்றியதாக ஒரே நாளில் 1,100 பேர் மீது வழக்குப் பதிவு
தமிழகம் முழுவதும் தடையை மீறி வெளியே சுற்றியதாக ஒரே நாளில் 1,100 பேர் மீது வழக்குப் பதிவு
5. கொரோனா முன்னெச்சரிக்கை: தமிழக முதல்வருக்கு பிரதமர் மோடி பாராட்டு
தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை சிறப்பாக இருப்பதாக தமிழக முதல்வருக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.