உலக செய்திகள்

கொடூர கொரோனாவை தொடர்ந்து சீனாவில் மேலும் ஒரு பயங்கர வைரஸ் + "||" + Hantavirus kills man in China, spreads fear, but it's not a new virus

கொடூர கொரோனாவை தொடர்ந்து சீனாவில் மேலும் ஒரு பயங்கர வைரஸ்

கொடூர கொரோனாவை தொடர்ந்து சீனாவில் மேலும் ஒரு பயங்கர வைரஸ்
கொடூர கொரோனாவை தொடர்ந்து சீனாவில் மேலும் ஒரு பயங்கர வைரஸ் பரவி வருகிறது.
பெய்ஜிங்

சீனாவின் குளோபல் டைம்ஸ் வெளியிட்டு உள்ள டுவிட்டில்  சீனாவின் யூனான் மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் திங்களன்று சாண்டோங் மாகாணத்திற்கு பேருந்தில் வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது இறந்தார். அவர் ஹான்டவைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது" என குறிப்பிட்டுள்ளது.

ஹான்டவைரஸ்கள் என்பது வைரஸ்கள் கொண்ட ஒரு குடும்பமாகும், அவை முக்கியமாக கொறித்துண்ணிகளால் பரவுகின்றன மற்றும் பிற நோய்களை மக்களுக்கு ஏற்படுத்தக்கூடும் வல்லமை படைத்தது என்றும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் தெரிவித்துள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், இது ஹான்டவைரஸ் நுரையீரல்  மற்றும் சிறுநீரகத்தை பாதித்து உடன் ரத்தக்கசிவு காய்ச்சலை ஏற்படுத்தும்.

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் படி, இந்த நோய் சிறுநீர், மலம், மற்றும் கொறித்துண்ணிகளின் உமிழ்நீர் ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டால் மட்டுமே பாதிக்ககூடும்.

தலைவலி, தலைச்சுற்றல், குளிர் மற்றும் வயிற்றுப் பிரச்சினைகள் ஆகியவற்றுடன் சோர்வு, காய்ச்சல் மற்றும் தசை வலிகள் ஆகியவை எச்.பி.எஸ் அறிகுறிகளில் அடங்கும், இது இருமல் மற்றும் மூச்சுத் திணறலுக்கு வழிவகுக்கும் மற்றும் ஆபத்தானது என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் சமூக தொற்றுநிலையை அடைந்துவிட்டதா? - சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி
கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் சமூக தொற்று நிலையை அடைந்து விட்டதா என்பது கட்டுப்படுத்துதல் திட்டம் முடிந்த பின்னரே தெரியவரும் என சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.
2. இன்று வரை 80 ஆயிரம் பேருக்கு கொரோனா சோதனை; மராட்டியம் - தென்மாநில புள்ளி விவரங்கள்
இன்று வரை 80 ஆயிரம் பேருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டு உள்ளது. மராட்டியம் மற்றும் தென்மாநில புள்ளி விவரங்கள் வருமாறு:
3. பிரதமர் கூறியபடி மெழுகுவர்த்தி ஏற்றினால் வெப்பத்தில் கொரோனா செத்துவிடும் - பா. ஜனதா எம்.எல்.ஏ விளக்கம்
பிரதமர் கூறியபடி மெழுகுவர்த்தி ஏற்றினால் வெப்பத்தில் கொரோனா செத்துவிடும் என பா.ஜனதா எம்.எல்.ஏ அதிரடி விளக்கம் கொடுத்துள்ளார்.
4. டெல்லி மாநாட்டில் பங்கேற்றதை மறைத்து மலேசியா செல்ல முயன்ற 8 பேர் விமான நிலையத்தில் சிக்கினர்
தப்லீக் ஜமாத் கூட்டத்தில் கலந்து கொண்ட 8 மலேசியர்கள், டெல்லியில் இருந்து மீட்பு விமானத்தில் பறக்க முயற்சித்தப்போது பிடிப்படத்தாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
5. ஊரடங்கு காரணமாக உலகம் முழுவதும் சுமார் 40,000 இந்திய கடற்படையினர் சிக்கித் தவிப்பு
ஊரடங்கு காரணமாக உலகம் முழுவதும் சுமார் 40,000 இந்திய கடற்படையினர் சிக்கித் தவிக்கின்றனர் என கடல்சார் அமைப்புகள் தெரிவித்து உள்ளன.