தேசிய செய்திகள்

மராட்டியத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்த 2 பேர் குணம் அடைந்தனர் + "||" + Pune: Two people who were found positive two weeks back, have now tested negative(twice) for #COVID19,

மராட்டியத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்த 2 பேர் குணம் அடைந்தனர்

மராட்டியத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்த 2 பேர் குணம் அடைந்தனர்
மராட்டியத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 2 பேர் குணம் அடைந்துள்ளனர்.
புனே, 

மராட்டிய  மாநிலத்தில் இரு வாரங்களுக்கு முன்,  2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது பரிசோனையில் கண்டறியப்பட்டது.  இதையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். 

அவர்கள் இரண்டு பேரையும் சிகிச்சைக்கு பின்னர்  மீண்டும் பரிசோதனை செய்ததில் அவர்களுக்கு வைரஸ் தொற்று பாதிப்புக்கு எதிர்மறையான முடிவுகள் தெரிவந்துள்ளது. இரண்டு முறை நடத்தப்பட்ட சோதனையிலும்  கொரோனா நெகட்டிவ் என முடிவுகள் வந்தன.

இதையடுக்கு அவர்கள் இரண்டு பேரும் இன்று (புதன்கிழமை) மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார்கள் என்று புணே மாநகராட்சி மக்கள் தொடர்பு அதிகாரி கூறினார். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிக்கையின்படி, இந்தியாவில் இதுவரை 562 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. விவசாயிகளுக்கு கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் உடனடியாக 2000 ரூபாய் வழங்கப்படும் : நிர்மலா சீதாராமன்
மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்களுக்கு ரூ.50 லட்சத்தில் மருத்துவ காப்பீடு செய்யப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
2. கிரேட்டா தன்பெர்க்குக்கு கொரோனா வைரஸ் பாதிப்பா?
கொரோனா வைரஸ் பாதிப்புக்கான அறிகுறிகள் இருந்ததால் தன்னை தானே தனிமைப்படுத்திக்கொண்டதாக கிரேட்டா தன்பெர்க் தெரிவித்துள்ளார்.
3. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 562 ஆக உயர்வு
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 562 ஆக உயர்ந்துள்ளது.
4. மராட்டியத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு
மராட்டியத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 112 ஆக உயர்ந்துள்ளது.
5. உலகளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆயிரத்தை நெருங்கியது
உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.