தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக முதல்வர் பழனிசாமி ஆலோசனை + "||" + TN Cm held discusssion with cheif secreatries

கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக முதல்வர் பழனிசாமி ஆலோசனை

கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக முதல்வர் பழனிசாமி ஆலோசனை
கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக முதல்வர் பழனிசாமி, அனைத்து துறை செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
சென்னை, 

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கொரோனா  தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாகப்  பிரதமர் மோடி நேற்று, நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் தெரிவித்தார். 

இதையடுத்து, மக்கள் அத்தியாவசிய தேவைகளைத் தவிர, பிற காரணங்களுக்கு வெளியே செல்ல அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.  பொது போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் முடக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்  தொடர்பாக முதல் அமைச்சர் பழனிசாமி கிரீன்வேஸ் இல்லத்தில் தலைமைச்செயலாளர், டிஜிபி திரிபாதி உள்பட அனைத்து துறை செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். 

கொரோனா சிகிச்சைக்காக மதுரை, தாம்பரம் உள்ளிட்ட நான்கு இடங்களில் தனி மருத்துவமனை  அமைப்பது தொடர்பாக முதல் அமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார். 

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா தடுப்பு நடவடிக்கை: திருப்பரங்குன்றம் கோவில் பங்குனி பெருவிழா ரத்து
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தொன்றுதொட்டு நடைபெற்று வரும் பங்குனிபெருவிழா கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ரத்து செய்யப்படுகிறது. அதை அறிந்த பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
2. ஒருங்கிணைந்த வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 133 விசாரணை கைதிகளுக்கு பரோல்
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஒருங்கிணைந்த வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் மத்திய, கிளை ஜெயில்களில் அடைக்கப்பட்டிருந்த 133 விசாரணை கைதிகளுக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது.
3. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஆப்கானிஸ்தானில் கைதிகள் விடுதலை
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஆப்கானிஸ்தானில் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
4. கொரோனா தடுப்பு நடவடிக்கை: 31-ந் தேதி வரை அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களும் ரத்து - மின்சார ரெயில்களும் இயங்காது
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வரும் 31-ந்தேதி வரை அனைத்து ரெயில்களும் ரத்து செய்யப்படுகிறது.
5. கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து உத்தவ் தாக்கரேயுடன் பிரதமர் மோடி பேச்சு
மராட்டியத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்தது. இதற்கிடையே கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயிடம், பிரதமர் மோடி கேட்டறிந்தார்.