தேசிய செய்திகள்

மராட்டியத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு + "||" + Total number of positive cases in Maharashtra rise to 112

மராட்டியத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

மராட்டியத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு
மராட்டியத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 112 ஆக உயர்ந்துள்ளது.
மும்பை,

மராட்டியத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி மக்களை பயமுறுத்தி வருகிறது. எனவே கொரோனாவை தடுக்க மாநில அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, மக்கள் வீடுகளில் முடக்கப்பட்டு உள்ளனர்.

நேற்று முன்தினம் வரை கொரோனாவுக்கு மராட்டியத்தில் 97 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். நேற்று ஒரே நாளில் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டது. இவர்கள் மும்பையில் 6 பேர், புனேயில் 2 பேர், அகமத்நகர், சத்தாராவை சேர்ந்த தலா ஒருவர் ஆவர். இதன் மூலம் மராட்டியத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 107 ஆக உயர்ந்து.

இந்த நிலையில், இன்று மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மராட்டியத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 112 ஆக உயர்ந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை...
கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் ரத்த பிளாஸ்மாக்களை பிரித்து அதை தற்போதைய கொரோனா நோயாளிகளுக்கு செலுத்தி, காப்பாற்றும் முயற்சிக்கான பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
2. உலக அளவில் கொரோனா வைரசுக்கு பலி எண்ணிக்கை 38 ஆயிரத்தை நெருங்கியது
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்தை நெருங்கியுள்ளது.
3. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் இன்னும் சமூக பரிமாற்றமாக மாறவில்லை; மத்திய அரசு
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் இன்னும் சமூக பரிமாற்றமாக மாறவில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
4. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1071 ஆக உயர்வு
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,071 ஆக உயர்ந்துள்ளது.
5. டெல்லியில் கொரோனா அறிகுறியுடன் ஒரே நாளில் 85 பேர் மருத்துவமனையில் அனுமதி
டெல்லியில் கொரோனா அறிகுறியுடன் ஒரே நாளில் 85 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.