தேசிய செய்திகள்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்கு கொரோனா பாதிக்கப்பட்டவர்களை மாற்றி வரும் பாகிஸ்தான் அரசு + "||" + Pakistan shifting coronavirus patients to PoK, say activists

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்கு கொரோனா பாதிக்கப்பட்டவர்களை மாற்றி வரும் பாகிஸ்தான் அரசு

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்கு கொரோனா பாதிக்கப்பட்டவர்களை மாற்றி வரும் பாகிஸ்தான் அரசு
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்கு கொரோனா பாதிக்கப்பட்டவர்களை மாற்றி வரும் பாகிஸ்தான் அரசுக்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
தெற்காசியாவில் பாகிஸ்தானில் 997 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.இதுவரை 7 பேர் பலியாகி உள்ளனர்.

இந்த நிலையில் கிழக்கு மாகாணமான பஞ்சாப் மற்றும் நாட்டின் பிற பகுதிகளிலிருந்து கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான மக்களை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மிர்பூர் நகரில் மாற்றி வருவதாக  காஷ்மீர் அரசியல் ஆர்வலர்கள் பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

சர்வதேச உதவிகளைப் பெறுவதற்காக பாகிஸ்தான் அரசு வேண்டுமென்றே கொரோனா வைரஸை பரப்பி வருவதாக அவர்கள் தெரிவித்து உள்ளனர். மேலும் இது தொடர்பாக அங்கு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

சுவிட்சர்லாந்தில் குடியேறியுள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு அரசியல் ஆர்வலரும், ஐக்கிய காஷ்மீர் மக்கள் தேசியக் கட்சியின் செய்தித் தொடர்பாளருமான நசீர், கொரோனா வைரஸ் நோயாளிகளை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிக்கு  மாற்றுவதற்கான பாகிஸ்தானின் நடவடிக்கையை கண்டித்துள்ளார்.

அவர் கூறி இருப்பதாவது:-

"பாகிஸ்தான் முழுவதும் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியவுடன், அவர்கள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஒரே ஒரு கொரோனா வைரஸ் பாதிப்பு மட்டுமே இருந்தது. பஞ்சாப் மாகாணத்திலிருந்து உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் வழக்குகள் மீர்பூர் நகருக்கு மாற்றப்படுகின்றன. இங்கே, அடிப்படை சுகாதார வசதிகள் எதுவும் இல்லை, அவர்கள் நோயாளிகளை சிகிச்சைக்காக பாகிஸ்தானின் பிற பகுதிகளுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். சாலை உள்கட்டமைப்பு மோசமாக இருப்பதால் சில நோயாளிகள் மருத்துவமனைகளுக்கு செல்லும் வழியில் உயிர் இழக்கின்றனர்.

அடிப்படை ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனைகள் செய்யக்கூடிய எந்த ஆய்வகமும் இங்கு இல்லை.திங்களன்று 27 பேர் இங்கு அழைத்து வரப்பட்டனர், அவர்களில் 13 பேர் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள். மீதமுள்ளவர்களின் முடிவுகள் காத்திருக்கின்றன. நூற்றுக்கணக்கான பிற நோயாளிகளை பாகிஸ்தானிலிருந்து மாற்றுவதற்கான திட்டங்கள் உள்ளன என்று உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர் என்று நசீர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. புலம்பெயர்ந்தோரின்வேதனை: ரெயில் நிலையத்தில் தாயார் இறந்தது தெரியாமல் எழுப்ப முயன்ற குழந்தை
முடிவில்லாத புலம்பெயர்ந்த நெருக்கடியில் பீகார் நிலையத்தில் இறந்த தாயை குழந்தை ஒன்று எழுப்ப முயற்சிக்கிறது
2. கொரோனா வைரஸ்: பிரேசில் இந்த வாரத்தில் நான்காவது முறையாக 1,000 இறப்புகளைப் பதிவு செய்தது
கொரோனா வைரஸ்: பிரேசில் இந்த வாரத்தில் நான்காவது முறையாக 1,000 இறப்புகளைப் பதிவு செய்து உள்ளது. அங்கு மொத்தம் இறப்பு எண்ணிக்கை 24,512 ஆக உள்ளது.
3. தொடரும் வேதனை: சென்னையில் மேலும் ஒரு கொரோனா நோயாளி தற்கொலை
சென்னையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒரு கொரோனா நோயாளி தற்கொலை செய்து கொண்டார்.
4. பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு 58 ஆயிரத்தை கடந்தது
பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு தற்போது 58 ஆயிரத்தை கடந்துள்ளது.
5. கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரிப்பு; கேரள செயல்பாடுகள் தோல்வியடைகிறதா?
கேரள செயல்பாடுகள் தோல்வியடைகிறதா? புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் சுகாதார ஊழியர்களிடையே பரவுவது அதிகாரிகளை கவலையடையச் செய்கிறது.