தேசிய செய்திகள்

பிரதமர் மோடி தலைமையிலான கூட்டத்தில் சமூக இடைவெளியை கடைப்பிடித்த அமைச்சர்கள் + "||" + Ministers who have embraced the social gap in a meeting led by Prime Minister Modi

பிரதமர் மோடி தலைமையிலான கூட்டத்தில் சமூக இடைவெளியை கடைப்பிடித்த அமைச்சர்கள்

பிரதமர் மோடி தலைமையிலான கூட்டத்தில் சமூக இடைவெளியை கடைப்பிடித்த அமைச்சர்கள்
பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு துறை சார்ந்த அமைச்சர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்தனர்.
புதுடெல்லி,

இந்தியாவில் பாதிப்பு ஏற்படுத்தி வரும் கொரோனா வைரசை எதிர்கொள்வது பற்றி பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு நேற்று ஆற்றிய உரையில், கொரோனா வைரசை தடுத்து நிறுத்தவும் மற்றும் நாம் பாதுகாப்புடன் இருப்பதற்கும், சமூகத்தில் ஒவ்வொருவரும் தனித்திருக்க வேண்டும் என்பதே ஒரே வழியாகும்.  ஒவ்வொருவரும் மற்றவரிடம் இருந்து தொலைவில் இருங்கள்.  சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என கூறினார்.

இதன்பின் நேற்று நள்ளிரவு முதல் 21 நாட்கள் வரை இந்தியா முழு அளவில் முடக்கப்படுகிறது என்றும் அறிவிப்பு வெளியிட்டார்.  இந்நிலையில், புதுடெல்லியின் லோக் கல்யாண் மார்க் பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடந்தது.

இந்த கூட்டத்தில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங், தகவல் தொடர்பு துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் உள்பட பல்வேறு துறைகளை சார்ந்த அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.  சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் அமைச்சர்கள் அமரும் இருக்கைகளுக்கு இடையே இடைவெளி விடப்பட்டு இருந்தது.