மாநில செய்திகள்

நம்மை நாம் காக்க அரசுக்கு ஒத்துழைப்பு தருவோம்; துணை முதல் அமைச்சர் வேண்டுகோள் + "||" + We will cooperate with the government to protect ourselves; Request of Deputy CM

நம்மை நாம் காக்க அரசுக்கு ஒத்துழைப்பு தருவோம்; துணை முதல் அமைச்சர் வேண்டுகோள்

நம்மை நாம் காக்க அரசுக்கு ஒத்துழைப்பு தருவோம்; துணை முதல் அமைச்சர் வேண்டுகோள்
நம்மை நாம் காக்க அரசுக்கு ஒத்துழைப்பு தருவோம் என துணை முதல் அமைச்சர் பொதுமக்களிடம் கேட்டு கொண்டுள்ளார்.
சென்னை,

கொரோனா வைரசை எதிர்கொள்வதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.  இதன் ஒரு பகுதியாக நேற்று நள்ளிரவு முதல் 21 நாட்கள் வரை இந்தியா முழு அளவில் முடக்கப்படுகிறது என்று பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.  இதுவரை 23 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.  ஒருவர் உயிரிழந்து உள்ளார்.

இதனை முன்னிட்டு, துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள செய்தியொன்றில், தமிழ் மண் மற்றும் தேசம் காக்க முதலில் நாம் நம்மை காத்து கொள்ள வேண்டும்.  தனிமை, அதுவே எதிர்காலத்திற்கான இனிமை என்று உணர்ந்து அரசுக்கு ஒத்துழைப்பு தருவோம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.