மாநில செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்; தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி இன்றிரவு 7 மணிக்கு உரை + "||" + Corona prevention measures; Tamil Nadu CM Palanisamy to address

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்; தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி இன்றிரவு 7 மணிக்கு உரை

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்; தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி இன்றிரவு 7 மணிக்கு உரை
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றி தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி இன்றிரவு 7 மணிக்கு உரையாற்றுகிறார்.
சென்னை,

சீனாவின் உகான் நகரில் தோன்றி உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை.  இந்தியாவில் இதுவரை 500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கொரோனா வைரசை எதிர்கொள்வதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.  இதன் ஒரு பகுதியாக நேற்று நள்ளிரவு முதல் 21 நாட்கள் வரை இந்தியா முழு அளவில் முடக்கப்படுகிறது என்று பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.  இதுவரை 23 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.  ஒருவர் உயிரிழந்து உள்ளார்.

தமிழகத்தில் ஊரடங்கையொட்டி பொதுமக்கள் வீடுகளை விட்டு தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம் என கேட்டு கொள்ளப்பட்டு உள்ளனர்.  இந்நிலையில், தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி இன்றிரவு 7 மணிக்கு உரையாற்றுகிறார்.  இதில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றி தமிழக மக்களுக்கு அறிவுரை வழங்குகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்; விப்ரோ குழுமம் ரூ.1,125 கோடி நிதியுதவி
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக விப்ரோ குழுமம் ரூ.1,125 கோடி நிதியுதவி வழங்குகிறது.
2. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் அரசுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்; அமைச்சர் விஜயபாஸ்கர்
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அரசுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
3. கொரோனா தடுப்பு நடவடிக்கை : நகர பகுதியில் கவர்னர் கிரண்பெடி ஆய்வு
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து புதுவை நகர பகுதியில் கவர்னர் கிரண்பெடி நேற்று இரவு ஆய்வு செய்தார்.
4. கவர்னரை உரையாற்ற எதிர்க்கட்சிகள் அனுமதிக்காததால் பெரும் பரபரப்பு: வரலாறு காணாத அமளி
கேரள சட்டசபையில் உரையாற்ற கவர்னரை அனுமதிக்காமல் எதிர்க் கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.