மாநில செய்திகள்

கொரோனா அச்சம்; 34 ஆயிரம் மாணவ மாணவியர் 12ம் வகுப்பு தேர்வை எழுதவில்லை + "||" + Corona fear; 34 thousand students did not write the 12th grade exam

கொரோனா அச்சம்; 34 ஆயிரம் மாணவ மாணவியர் 12ம் வகுப்பு தேர்வை எழுதவில்லை

கொரோனா அச்சம்; 34 ஆயிரம் மாணவ மாணவியர் 12ம் வகுப்பு தேர்வை எழுதவில்லை
கொரோனா வைரஸ் தொற்று அச்சத்தினால் 34 ஆயிரம் மாணவ மாணவியர் 12ம் வகுப்பு பொது தேர்வை எழுதவில்லை.
சென்னை,

இந்தியாவில் கொரோனா வைரசை எதிர்கொள்வதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.  கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் நேற்றிரவு முதல் 21 நாட்கள் வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொது தேர்வு வழக்கம்போல் நடைபெறும் என அரசு அறிவித்து இருந்தது.  எனினும், கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட கூடும் என்ற அச்சம் மற்றும் சரிவர இயங்காத பேருந்துகள் ஆகியவற்றால் நேற்று நடந்த 12ம் வகுப்பு பொது தேர்வை 34 ஆயிரம் மாணவ மாணவியர் எழுதவில்லை என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. அதேபோன்று, திருவள்ளூர் மாவட்டத்தில் 1,574  மாணவர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை என்ற விவரங்களும் வெளியாகி இருக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா அச்சம்; சேனிட்டைசரை தவறாக பயன்படுத்திய நபர் மருத்துவமனையில் அனுமதி
கொரோனா அச்சத்தில் சேனிட்டைசரை தவறாக பயன்படுத்தியதில் தீக்காயமடைந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
2. கொரோனா அச்சம் எதிரொலி: முக கவசம் அணிந்து எளிமையாக நடந்த திருமணங்கள்
கொரோனா அச்சம் எதிரொலியாக ராமநாதபுரத்தில் திருமணங்கள் எளிமையாக நடந்தன. இதில் குடும்பத்தினர் மட்டும் கலந்து கொண்டனர்.
3. கொரோனா அச்சம்: வாடும் மல்லிகைப்பூ; நாளொன்றுக்கு ரூ.1 கோடி இழப்பு
கொரோனா வைரஸ் அச்சத்தினால் பறிக்க ஆளில்லாமல் மல்லிகைப்பூ செடியிலேயே விடப்பட்டு உள்ளதுடன் நாளொன்றுக்கு ரூ.1 கோடி வர்த்தக பாதிப்பும் ஏற்படுகிறது.
4. கொரோனா அச்சம் : தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்ட மத்திய அமைச்சர்
கொரோனா அச்சம் காரணமாக வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டார்.
5. கொரோனா அச்சம்: இந்திய ஒலிம்பிக் சங்க குழுவின் டோக்கியோ பயணம் தள்ளிவைப்பு
கொரோனா அச்சம் காரணமாக இந்திய ஒலிம்பிக் சங்க குழுவினர் டோக்கியோ பயணம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.