தேசிய செய்திகள்

21 ஊரடங்கு நாள் காலத்தில் 80 கோடி மக்களுக்கு கிலோ ரூ.2 க்கு கோதுமை ரூ.3 க்கு அரசி + "||" + 80 crore Indians to get wheat at Rs 2 per kg, rice Rs 3 per kg during 21-day lockdown against coronavirus COVID-19

21 ஊரடங்கு நாள் காலத்தில் 80 கோடி மக்களுக்கு கிலோ ரூ.2 க்கு கோதுமை ரூ.3 க்கு அரசி

21 ஊரடங்கு நாள் காலத்தில் 80 கோடி மக்களுக்கு கிலோ ரூ.2 க்கு கோதுமை ரூ.3 க்கு அரசி
ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கும் 21 நாட்களில் நாடு முழுவதும் 80 கோடி ஏழை மக்களுக்கு மானிய விலையில் ரேஷன் வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
புதுடெல்லி

இந்தியாவில் பாதிப்பு ஏற்படுத்தி வரும் கொரோனா வைரசை எதிர்கொள்வது குறித்து பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு நேற்று ஆற்றிய உரையில், கொரோனா வைரசை தடுத்து நிறுத்தவும் மற்றும் நாம் பாதுகாப்புடன் இருப்பதற்கும், சமூகத்தில் ஒவ்வொருவரும் தனித்திருக்க வேண்டும் என்பதே ஒரே வழியாகும்.  ஒவ்வொருவரும் மற்றவரிடம் இருந்து தொலைவில் இருங்கள்.  சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என கூறினார்.

இந்நிலையில், புதுடெல்லியின் லோக் கல்யாண் மார்க் பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று 

இந்த கூட்டத்தில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங், தகவல் தொடர்பு துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் உள்பட பல்வேறு துறைகளை சார்ந்த அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.  சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் அமைச்சர்கள் அமரும் இருக்கைகளுக்கு இடையே இடைவெளி விடப்பட்டு இருந்தது.

கொரோனா வைரஸ்  தொற்றுநோய்க்கு எதிரான 21 நாள் ஊரடங்கின் போது நாடு முழுவதும் 80 கோடி ஏழை மக்களுக்கு மானிய விலையில் ரேஷன் வழங்க மத்திய அரசு முடிவு செய்து உள்ளது . கிலோவுக்கு ரூ .27 மதிப்புள்ள கோதுமை ஒரு கிலோவுக்கு ரூ .2 ரூபாய்க்கும், கிலோவுக்கு ரூ.37 மதிப்புள்ள அரிசி ஒரு கிலோவுக்கு ரூ .3 வீதமும் நாடு முழுவதும் உள்ள ஏழை மக்களுக்கு வழங்கவும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக  தகவல் வெளியாகி உள்ளது. 

கூட்டத்திற்கு பிறகு இது குறித்து தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது:-

"உலகின் மிகப்பெரிய உணவு பாதுகாப்பு அமைப்பான பொது விநியோக முறை (பி.டி.எஸ்) இன் கீழ் 80 கோடி மக்களுக்கு ஒரு நபருக்கு 7 கிலோ உணவு வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

கிலோ ரூ.27 மதிப்புள்ள கோதுமை ரூ.2 க்கும் ரூ.37 மதிப்புள்ள அரிசி கிலோ ரூ.3 க்கும் ரேஷன் கடைகள் மூலம் மானிய விலையில் வழங்கப்படும் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பாதிப்பு: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 106 புதிய பாதிப்புகள் - 6 இறப்புகள் பதிவாகியுள்ளன
கடந்த 24 மணி நேரத்தில், 106 புதிய பாதிப்புகள் மற்றும் 6 இறப்புகள் பதிவாகியுள்ளன என சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் இணை செயலாளர் லாவ் அகர்வால் கூறி உள்ளார்.
2. கொரோனா வைரஸுக்கு எதிரான 'வெற்றியை' கொண்டாட சீன மார்க்கெட்களில் மீண்டும் பாம்பு, நாய்,வவ்வால் விற்பனை
கொரோனா வைரஸுக்கு எதிரான 'வெற்றியை' கொண்டாடும் சீனா மார்க்கெட்களில் பாம்பு, நாய்,பூனை வவ்வால்கள் விற்பனை மீண்டும் தொடங்கின.
3. சென்னை-நகரங்களில் ஊரடங்கை மீறி இறைச்சி -மீன் கடைகளில் கட்டுப்பாடற்ற கூட்டம்
சென்னை மற்றும் நகரங்களில் ஊரடங்கையும் மீறி இன்று ஞாயிற்றுக்கிழமை இறைச்சி மற்றும் மீன் கடைகளில் கட்டுப்பாடற்ற முறையில் மக்கள் கூட்டம் குவிந்தது.
4. சீனாவுக்கு அடுத்த தலைவலி ஹூபே மாகாணத்தில் வெடிக்கும் கலவரம்
ஹூபே மாகாணத்தில் இருந்து மக்கள் வெளியேற முயற்சிப்பதால் ஆங்காங்கே வன்முறை வெடித்துள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
5. உலகை அச்சுறுத்தும் கொரோனா; கவலையின்றி ஏவுகணை சோதனையில் வடகொரியா
கொரோனா வைரஸ் வெடிப்பின் மத்தியில் வட கொரியா முன்னெப்போதையும் விட அதிக ஏவுகணைகளை சோதனை செய்து வருகிறது.