மாநில செய்திகள்

ஏப்ரல் மாதம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரேசன் பொருட்கள் இலவசம்; முதல் அமைச்சர் பழனிசாமி + "||" + Ration items are free for all family cardholders in April; CM Palanisamy

ஏப்ரல் மாதம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரேசன் பொருட்கள் இலவசம்; முதல் அமைச்சர் பழனிசாமி

ஏப்ரல் மாதம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரேசன் பொருட்கள் இலவசம்; முதல் அமைச்சர் பழனிசாமி
ஏப்ரல் மாதம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரேசன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என முதல் அமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னை,

தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி தமிழக மக்களுக்கு ஆற்றிய உரையில், தமிழக முதல்வராக இல்லாமல் உங்களில் ஒருவனாக பேசுகிறேன்.

கொரோனா வைரஸ் காட்டுத்தீ போல பரவி வருகிறது.  அதனால் 21 நாட்கள் ஊரடங்கை மக்கள் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்.  வீட்டை விட்டு வெளியே வராதீர்கள்.  நீங்கள் பாதுகாப்பாக வீட்டிலேயே இருங்கள்.  'விழித்திரு, விலகியிரு, வீட்டிலிரு' என அனைவரும் இருக்க வேண்டும்.

அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கும்.  மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம்.  பொறுப்பான குடிமக்களாக இருந்து சமுதாயத்தை காப்போம்.  மருத்துவர்களின் உதவியின்றி சுய மருத்துவம் செய்ய வேண்டாம்.  ஊரடங்கை கடைபிடித்து வீட்டில் இருங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஏப்ரல் மாதம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரேசன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும்.  கொரோனாவை எதிர்கொள்ள அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என கூறியுள்ளார்.