உலக செய்திகள்

உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 21 ஆயிரத்தை தாண்டியது + "||" + Coronavirus live updates: Spain’s death toll surpasses China after biggest one-day jump

உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 21 ஆயிரத்தை தாண்டியது

உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 21 ஆயிரத்தை தாண்டியது
உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 21 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
ஜெனீவா, 

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோன வைரஸ், உலகம் முழுவதையும் பீதிக்குள்ளாகியிருக்கிறது.  வைரசின் பிறப்பிடமான சீனாவை விட இத்தாலி, ஸ்பெயின் நாடுகளில் கொரோனா வைரஸ் பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.   சீனாவில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகக் கூறப்பட்ட கொரோனா வைரஸ், மீண்டும் அங்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. 

சீனாவில் புதிதாக 67 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று ஒரு நாளில் 6 பேர் சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். அதேபோல், கொரோனா வைரசால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இத்தாலியில் , புதிதாக 5,210 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 683 பேர் உயிரிழந்துள்ளனர்.

வல்லரசு நாடான அமெரிக்காவும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறது. அமெரிக்காவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 11,192 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவில் ஒட்டு மொத்தமாக 68 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரஸ் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். ஒட்டு மொத்தமாக அமெரிக்காவில் 944 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். 

ஸ்பெயினும் கொரோனா வைரஸ் பாதிப்பால் நிலைகுலைந்துள்ளது. ஸ்பெயினில் புதிதாக 7,457 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக ஸ்பெயினில் 49 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,647 பேர் உயிரிழந்துள்ளனர். 

 உலகளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 21 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. தற்போது வரை  உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 468,905 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  114,218 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக அதிமுக சார்பில் ரூ.1 கோடி
கொரோனா நோய் தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக அதிமுக சார்பில் ரூ.1 கோடி நிதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2. கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு சீனாவில் 3 நிமிடங்கள் மவுன அஞ்சலி
கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்காக சீனாவில் இன்று 3 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
3. உலகையே முடங்க வைத்த கொரோனாவால் வறுமையின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கும் கூலி தொழிலாளர்கள்
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக நாடே முடங்கி கிடக்கும் சூழலில் வேலைக்கு சென்றால் மட்டுமே ஊதியம் என்ற நிலையில் வாழ்ந்து வந்த தினக்கூலி தொழிலாளர்கள் வறுமையின் கோரப்பிடியில் சிக்கி தவித்து வரும் பரிதாப சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
4. கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க கோட்டை பெருமாள் கோவிலில் சிறப்பு யாகம்
கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க கோட்டை பெருமாள் கோவிலில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.
5. கொரோனா அச்சுறுத்தல் குறித்து, முன்னணி விளையாட்டு வீரர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
கொரோனா அச்சுறுத்தல் குறித்து, முன்னணி விளையாட்டு வீரர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.