தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை; சுகாதாரத்துறை அமைச்சகம் + "||" + No community transmission yet, says Health Ministry

இந்தியாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை; சுகாதாரத்துறை அமைச்சகம்

இந்தியாவில் கொரோனா வைரஸ்  சமூக  பரவலாக மாறவில்லை;   சுகாதாரத்துறை அமைச்சகம்
இந்தியாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரஸ் இன்னும் சமூக பரவலாக மாறவில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  சீனாவை பிறப்பிடமாகக் கொண்ட கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை மிரட்டி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி, 563 இந்தியர்கள் 43 வெளிநாட்டினர் உள்பட  606 பேருக்கு கொரோனா  பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

”தற்போது வரை 15,24,266 பயணிகள் விமான நிலையங்களில் பரிசோதிக்கப்பட்டுள்ளனர்.  22,928 மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன ”என்றும் சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது.  இந்தியாவில் கொரோனா வைரஸ் இன்னும் சமூக பரவலாக மாறவில்லை என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சுட்டிக்காட்டியதாகவும் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் லுவ் அகர்வால் தெரிவித்தார். 

சமூக பரவல் நிலை என்பது, பாதிப்புக்கு ஆளானவர்களுடன் தொடர்பில் இல்லாதவர்களும், தொற்று உள்ள நாடுகளுக்குச் செல்லாதவர்களும், பாதிக்கப்படும் நிலையாகும். பாதிக்கப்பட்ட நபருக்கு, தொற்று எங்கிருந்து உருவானது என்பதையே கண்டறிய முடியாத அபாயமான நிலையாக, இது கூறப்படுகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா வைரஸ் பிரச்சினையில் உலக சுகாதார நிறுவனம், சீனா பக்கம் சாய்ந்து விட்டது - டிரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டு
உலக சுகாதார நிறுவனம், கொரோனா வைரஸ் பிரச்சினையில் சீனா பக்கம் சாய்ந்து விட்டது என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அதிரடியாக குற்றம் சாட்டி உள்ளார்.
2. கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க 144 தடை உத்தரவு: அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகள் திறப்பு - இடைவெளி விட்டு வரிசையில் நின்ற மக்கள்
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தேனியில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகள் திறந்து இருந்தன. மக்கள் இடைவெளிவிட்டு வரிசையில் காத்திருந்து பொருட்கள் வாங்கினர்.
3. கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு ரயில் பெட்டிகளை தனிமை வார்டுகளாக மாற்ற ரயில்வே நிர்வாகம் பரிசீலனை
கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு ரயில் பெட்டிகளை தனிமை வார்டுகளாக மாற்ற ரயில்வே நிர்வாகம் பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
4. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க - அரசு மருத்துவமனையில் 700 படுக்கைகளுடன் தனிபிரிவு
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 700 படுக்கைகள் கொண்ட தனிபிரிவு அமைக்கப்பட்டுள்ளது.
5. டெல்லியில் கொரோனா பாதிக்கப்பட்ட மருத்துவரை சந்தித்த 800 பேர் தனிமைப்படுத்தி கண்காணிப்பு
டெல்லியில் கொரோனா பாதிக்கப்பட்ட மருத்துவரை சந்தித்த 800 பேர் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்படுவதாக டெல்லி அரசு அறிவித்துள்ளது.