உலக செய்திகள்

கொரோனாவை ஒழிக்க ஊரடங்கு மட்டும் போதுமானது இல்லை ; உலக சுகாதார அமைப்பு + "||" + Lockdown will not be enough, use this time to attack coronavirus: WHO

கொரோனாவை ஒழிக்க ஊரடங்கு மட்டும் போதுமானது இல்லை ; உலக சுகாதார அமைப்பு

கொரோனாவை ஒழிக்க ஊரடங்கு மட்டும் போதுமானது இல்லை ; உலக சுகாதார அமைப்பு
கொரோனாவை ஒழிக்க ஊரடங்கு மட்டும் பலன் தராது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
ஜெனீவா, 

கொரோனாவை ஒழிக்க ஊரடங்கு மட்டுமே பலன் தராது என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கெப்ரேயேசுஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது;- கொரோனாவை ஒழிக்க ஊரடங்கு மட்டுமே பலன் தராது. 

ஊரடங்கு மூலம் மக்களை வீட்டுக்குள் இருக்க வைப்பது சுகாதாரத்துறை மீதான அழுத்தத்தைக் குறைக்கும். எனினும், கொரோனாவை ஒழிக்க இது உதவாது. ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள இந்த தருணத்தை கொரோனாவை ஒழிக்கும் பணியில் உலக நாடுகள் கவனம் செலுத்த வேண்டும். 2-வது வாய்ப்பை நீங்கள் உருவாக்கியுள்ள இந்த நேரத்தில், இதை எப்படிப் பயன்படுத்தப் போகிறீர்கள் என்பதுதான் கேள்வியாக உள்ளது.  

கடுமையான  நடவடிக்கைகள்,சோதனைகள் ஆகியவை தொற்றைக் கண்டறிய சிறந்த வழியாக மட்டுமல்லாமல்  தொற்றைத் தடுக்கவும் சிறந்த வழியாக உள்ளது. கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவரிடம் இருந்து யாருக்குத் தொற்று பரவியது என்பதைக் கண்டறிய தெளிவான திட்டம் தேவை” என்றார். 


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா ஊரடங்கு மூலமாக இலட்சக்கணக்கான மக்கள் வாழ்வாதாரம் இழந்ததுதான் பலன் - மு.க ஸ்டாலின்
அரசை நம்பாமல் கொரோனாவிலிருந்து பாதுகாத்துக் கொள்ள தாங்களே “சுய பாதுகாப்பு” நடவடிக்கைகளில் மக்கள் கவனமாக ஈடுபட வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
2. கொரோனா காலத்தில் பொது போக்குவரத்து பயணத்துக்கு பாதுகாப்பானதா? நிபுணர்கள் கருத்து
கொரோனா காலத்தில் பொது போக்குவரத்து சாதனங்கள் பயணத்துக்கு பாதுகாப்பானவையா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
3. கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்திய ஆக்கி வீரர் மன்தீப் சிங் ஆஸ்பத்திரியில் அனுமதி: பயிற்சி முகாம் தொடங்குவதில் சிக்கல்
கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்திய ஆக்கி வீரர் மன்தீப் சிங் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மொத்தம் 6 வீரர்கள் பாதிக்கப்பட்டு இருப்பதால் பயிற்சி முகாம் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
4. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 388 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 388 பேர் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.
5. கொரோனாவை தடுப்பதற்கான உலகின் முதல் தடுப்பூசி ரஷியாவில் தயார்: பல நாடுகள் வாங்க ஆர்வம்
உலகை அச்சுறுத்தும் கொரோனா நோய் தொற்றை தடுப்பதற்கான முதல் தடுப்பூசி தயார் என ரஷியா அறிவித்துள்ளது. தடுப்பூசியை வாங்க பல நாடுகள் ஆர்வம் காட்டி உள்ளன.