தேசிய செய்திகள்

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை; ஜி 20 தலைவர்கள் இன்று ஆலோசனை + "||" + G20 summit to unite global response to coronavirus pandemic: Saudi King Salman

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை; ஜி 20 தலைவர்கள் இன்று ஆலோசனை

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை; ஜி 20 தலைவர்கள் இன்று ஆலோசனை
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக ஜி 20 தலைவர்கள் இன்று ஆலோசனை நடத்த உள்ளனர்.
ரியாத்,

உலகம் முழுவதையும் கொரோனா  வைரஸ் ஆட்டி படைத்து வரும் நிலையில்,  ஜி 20 மாநாடுகளின் தலைவர்கள் இன்று ஆலோசனை நடத்த உள்ளனர். வீடியோ கான்பரன்சிங் மூலமாக நடைபெறும் இந்த ஆலோசனைக்கூட்டத்தில், பிரதமர் மோடியும் பங்கேற்க உள்ளார். 

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சமீபத்தில், சார்க் உறுப்பு நாடுகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.அதைத் தொடர்ந்து, மேற்காசிய நாடான சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர், முகமது பின் சல்மானுடன், பிரதமர் நரேந்திர மோடி, சமீபத்தில், தொலைபேசி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது, வளர்ந்து வரும் மற்றும் வளர்ந்த நாடுகள் இணைந்து, கொரோனாவை எதிர்கொள்வது குறித்து அவருடன் பேசினார்.

இந்த நிலையில், ஜி 20 நாடுகளின் தலைவர்கள் இன்று கொரோனா விவகாரம் குறித்து ஆலோசனை நடத்துகின்றனர். ஜி - 20 அமைப்பில், அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, ஜெர்மனி, பிரான்ஸ், இந்தியா, இந்தோனேஷியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்ரிக்கா, தென் கொரியா, துருக்கி, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா இடம்பெற்றுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக காஞ்சீபுரம் மாவட்டத்தில் 806 பேர் கண்காணிப்பு
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக காஞ்சீபுரம் மாவட்டத்தில் 806 பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
2. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காஞ்சீபுரத்தில் கிருமிநாசினி தெளிப்பு
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக காஞ்சீபுரத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
3. வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் பொதுமக்கள் கை கழுவும் வசதி; கலெக்டர் தொடங்கி வைத்தார்
வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்கள் கை கழுவ வசதியாக தொட்டி அமைக்கப்பட்டது. இதனை கலெக்டர் சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தார்.
4. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை: சீனாவில் இருந்து கோவை வந்த 8 பேர் பொது இடங்களுக்கு செல்ல தடை சுகாதாரத்துறையினர் தீவிர கண்காணிப்பு
கொரோனா வைரஸ் பரவிவரும் சீனாவில் இருந்து கோவை வந்த 8 பேரை பொது இடங்களுக்கு செல்ல சுகாதாரத்துறையினர் தடை விதித்துள்ளனர்.