தேசிய செய்திகள்

டெல்லியில் கொரோனா பாதிக்கப்பட்ட மருத்துவரை சந்தித்த 800 பேர் தனிமைப்படுத்தி கண்காணிப்பு + "||" + 800 Who Came In Contact With COVID-19+ Doctor Quarantined: Delhi Minister

டெல்லியில் கொரோனா பாதிக்கப்பட்ட மருத்துவரை சந்தித்த 800 பேர் தனிமைப்படுத்தி கண்காணிப்பு

டெல்லியில் கொரோனா பாதிக்கப்பட்ட மருத்துவரை சந்தித்த 800 பேர் தனிமைப்படுத்தி கண்காணிப்பு
டெல்லியில் கொரோனா பாதிக்கப்பட்ட மருத்துவரை சந்தித்த 800 பேர் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்படுவதாக டெல்லி அரசு அறிவித்துள்ளது.
புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் ஏழை எளிய மக்களுக்கு பயனளிக்கும் வகையில் சமுதாய மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. 
வடகிழக்கு டெல்லியில் உள்ள  சமுதாய மருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதார அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர். மருத்துவரின் மனைவி மற்றும் மகளுக்கு  கொரோனோ தொற்று ஏற்பட்டுள்ளது. 

இதையடுத்து,  மார்ச் 12 -முதல் 18 வரை மஜ்பூரில் உள்ள கிளினிக்கிற்குச் சென்ற பார்வையாளர்கள் சுமார் 800 பேர் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக டெல்லி சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்துள்ளார். மேலும்,   தனிமைப்படுத்தலுக்கான  காலத்தின் போது  கொரோனா வைரஸ் அறிகுறிகள் ஏற்பட்டால் மருத்துவரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் தெரிவித்தார். 

 மருத்துவர் வெளிநாடுகளுக்கு சென்று வந்ததில் தொற்று ஏற்பட்டதா அல்லது பயணம் செய்த ஒருவருடன் தொடர்பு கொண்டதா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

தொடர்புடைய செய்திகள்

1. கணவருக்கு ‘93’ மனைவிக்கு ‘88’ கொரோனா வைரசில் இருந்து மீண்ட வயதான கேரள தம்பதியர் - குணமடைந்தது எப்படி? ருசிகர தகவல்கள்
கேரள மாநிலத்தில் மிக வயதான தம்பதியர், கொரோனா வைரசில் இருந்து மீண்ட அதிசயம் நடந்து இருக்கிறது. இதையொட்டிய சுவாரசிய தகவல்கள் கிடைத்துள்ளன.
2. 2-ஆம் உலகப் போருக்குப் பின்னர் மிகவும் சவாலான நெருக்கடியாக கொரோனா தொற்று உள்ளது: ஐ.நா தலைவர்
2-ஆம் உலகப் போருக்கு பின்னர் மிகவும் சவாலான நெருக்கடியாக கொரோனா தொற்று உள்ளது என்று ஐநா தலைவர் கூறினார்.
3. உலக அளவில் கொரோனா வைரசுக்கு பலி எண்ணிக்கை 42 ஆயிரத்தை தாண்டியது
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 42 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
4. உணவின்றி தவிப்பவர்களுக்கு உதவும் பிரணிதா
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நடக்கும் ஊரடங்கால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
5. கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு இந்தியாவில் மருந்துகள் தட்டுப்பாடு இல்லை- மத்திய அரசு திட்டவட்டம்
கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு இந்தியாவில் மருந்துகள் தட்டுப்பாடு இல்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.